4 பட உழைப்பை மொத்தமாக போட்ட லோகேஷ் கனகராஜ்.. கேரியரை அவர் காலடியில் போட்ட பரிதாபம்

தமிழ் சினிமாவுக்கு மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து கார்த்தியுடன் கைதி, இதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் மாஸ்டர் போன்ற தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக பார்க்கப்படுகிறார்.

எனவே கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து உருவான திரைப்படம் விக்ரம். கமலின் தீவிர ரசிகர் தான் லோகேஷ் கனகராஜ். கமல் இயக்கிய படங்களைப் பார்த்துதான் இயக்கி இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வந்ததாக பல மேடைகளில் கூறியுள்ளார்.

தனது குருவான கமலஹாசனை வைத்து ஒரு ரசிகன் இயக்கும் இப்படம் கண்டிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இதேபோல் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி உள்ள விக்ரம் படமும் சொதப்பி விடுமா என ரசிகர்கள் கேட்டுள்ளனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் கண்டிப்பாக இதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.

அதுமட்டுமில்லாமல் கமலின் தீவிர ரசிகராக லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் சிறப்பாக நடிக்க வைத்திருப்பார் எனவும் கூறி வருகின்றனர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்திற்காக 4 படத்தின் வேலையை ஒன்றாக செய்து கொண்டிருக்கிறேன் என படத்தை குறித்து கூறி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிர விட்டிருக்கிறார். அவர் ஒட்டு மொத்த உழைப்பையும் கமல் காலடியில் போட்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்

ஆகையால் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக ரசிகர்கள் காத்திருக்கும் விக்ரம் படமும் ரசிகர்களை ஏமாற்றாது என படக்குழுவை போலவே ரசிகர்களும் தற்போது நம்பத் தொடங்கிவிட்டனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →