சிம்பு, தேசிங்கு பெரியசாமி ப்ராஜெக்ட் இன்னும் ஒரு முடிவு கிடைக்காமல் திணறி வருகிறது. இதற்காக சிம்பு ஒரு வருடம் காத்திருந்தும் பிரயோஜனம் இல்லை. கடைசியில் வந்த படத்தை யாவது பண்ணுவோம் என தக்லைப் படத்தில் கமிட்டாகி நடிக்க தொடங்கிவிட்டார்.
ஆரம்பத்தில் தேசிங்கு பெரியசாமி படத்தை, கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான விக்ரம் படம் நல்ல வசூலை பெற்று தந்தது. இதனால் கமல் தன்னுடைய ராஜ் கமல் நிறுவனத்தை தூசி தட்டினார்.
விக்ரம் படம் கொடுத்த 580 கோடி வசூலால் கமல் அடுத்தடுத்து நிறைய படங்களை தயாரிக்க கமிட் செய்தார். அதில் ஒன்றுதான் சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி ப்ராஜெக்ட். ஆரம்பத்தில் இந்த ப்ராஜெக்ட்டுக்கு 200 கோடிகள் பட்ஜெட் கேட்டார் தேசிங்கு பெரியசாமி.. பட்ஜெட் அதிகம் என குறைக்குமாறு கமல் கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் 170 கோடிகள் இருந்தால் கூட படம் எடுத்து தருகிறேன் என தேசிங்கு கூறவே, அப்பொழுதும் கமல் ஒத்துக்கவில்லை. இதனால் ஒரு வருடமாக இதை நம்பி இருந்த சிம்பு மனவேதனை அடைந்தார். தயாரிப்பாளர்களை தேடி வந்த அவர், ஒரு கட்டத்தில் தானே இந்த படத்தை எடுக்கவும் முன் வந்தார்.
சிம்பு துபாய் சென்று இந்த படத்தை தயாரிப்பதற்கு பல பைனான்சியர்களிடம் பேசி வந்தார்.அங்கே 100 கோடிகள் வரை கொடுத்து இந்த படத்தை தயாரிப்பதற்கு ரெடியானார்கள். ஆனால் இதில் இருக்கக்கூடிய “periodic portion” போன்றவைகளுக்கு செலவு நிறைய ஆகும் அதனால் 100 கோடிகள் பத்தாது என இந்த படம் கைவிடப்பட்டது.