Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

400 கோடியை எட்டிய விக்ரம்.. பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஸ்டாரே ஓரம்கட்டும் உலகநாயகன்!

400 கோடியை எட்டிய விக்ரம்.. பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஸ்டாரே ஓரம்கட்டும் உலகநாயகன்!

கடந்த ஜூன் 3-ம் தேதி திரைக்கு வந்த விக்ரம் திரைப்படம் அன்று முதல் இன்று வரை எந்த வித நெகட்டிவ் விமர்சனங்களையும் பெறாமல், தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்கில் அலை மோதுகின்றனர். 4 வருடங்களுக்குப் பிறகு உலகநாயகனை திரையில் பார்த்த ரசிகர்கள் […]

கடந்த ஜூன் 3-ம் தேதி திரைக்கு வந்த விக்ரம் திரைப்படம் அன்று முதல் இன்று வரை எந்த வித நெகட்டிவ் விமர்சனங்களையும் பெறாமல், தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்கில் அலை மோதுகின்றனர். 4 வருடங்களுக்குப் பிறகு உலகநாயகனை திரையில் பார்த்த ரசிகர்கள் விக்ரம் படத்தின் வசூலை தாறுமாறாக குவிக்க செய்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் தனது மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் விக்ரம் படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்து அசத்தியுள்ளனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் விரைவில் எடுக்க முடிவெடுத்திருக்கிறார்.

ஏனென்றால் இதுவரை கமல் நடிப்பில் வெளியான எந்த படங்களும், வாங்கிக் கொடுக்காத பெருமையை விக்ரம் கொடுத்ததால் கமல் சந்தோசத்தில் திளைக்கிறார். தமிழகத்தில் மட்டும் விக்ரம் 165 கோடி வசூலை வாரி குவித்து இருக்கிறது.

இதனால் வசூல் ரீதியாக விக்ரம் படத்தின் மூலம் கமலஹாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு கடும் போட்டியாக மாறியது மட்டுமல்லாமல் அவருடைய எந்திரன், கபாலி போன்ற படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளி உள்ளது. குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O  திரைப்படம் உலக அளவில் 700 கோடி வசூலை குவித்து முன்னிலை வகிக்கிறது.

இந்தப் படத்திற்கு போட்டியாக தற்போது விக்ரம் சர்வதேச அளவில் 20 நாட்களில் மட்டும் 385 கோடி வசூலை தாண்டி கூடியவிரைவில் 400 கோடி உடன் பாக்ஸ் ஆபீஸில் 2.O படத்திற்கு டஃப் கொடுக்க உள்ளது. எப்படிப் பார்த்தாலும் விக்ரம் படத்திற்கான வசூல் நிறைவடையும்போது பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை குவித்த தமிழ் படங்களில் இரண்டாவது இடத்தை விக்ரம் நிச்சயம் பெறும்.

இதனால் இதுவரை வசூல் நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் இவர்களின் வரிசையில் உலகநாயகன் கமலஹாசனும் இடம் பிடித்திருக்கிறார். மேலும் விக்ரம் திரைப்படம் வரும் ஜூலை 8-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ரிலீஸாகி அங்கேயும் மாஸ் காட்ட போகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.