வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்த உலக நாயகன் யார் என வெளிப்படையாக சொன்ன கமல்.. நடிப்பு அரக்கனாச்சே

கோலிவுட்டில் தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? வசூலில் யார் நம்பர் ஒன்? என்றெல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அந்த இடத்தைப் பிடிப்பதற்கு அஜித் மற்றும் விஜய் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் உலக நாயகன் கமலஹாசன் அடுத்த உலக நாயகன் யார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டு உடைத்திருக்கிறார். தற்சமயம் ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என கூறப்படும் நடிகர் ஒருவரை தான் உலக நாயகன் பேட்டி ஒன்றில் வியந்து பேசி உள்ளார்.

Also Read: பட்டாகத்தியுடன் கேக் வெட்டிய விஜய்.. பிரபல பத்திரிக்கையால் கொந்தளித்த ரசிகர்கள்

அதிலும் சரவணனாக இருந்து சூர்யாவாக மாறுவதற்கு அவருடைய கடின உழைப்பு பாராட்டக் கூடியது என்றும் வியந்து இருக்கிறார். மேலும் பட்டமோ பதவியோ நம்முடைய கடின உழைப்பால் கிடைக்க வேண்டுமே தவிர அதை தாமே எடுத்துக் கொள்வதோ மற்றவரிடம் பறித்துக் கொள்வதோ அதற்குப் பின்னால் ஓடுவதோ இருக்கக் கூடாது.

இதற்கெல்லாம் விதிவிலக்க இருப்பவர் தான் சூர்யா. இந்த மனிதனுக்கு அனைத்தும் கிடைக்கும். ஏனென்றால் அவரின் உழைப்பு அளவற்றது. அதனாலையே அவர் அடுத்து உலக நாயகன் என்று கமலஹாசன் தன் வாயார பாராட்டி இருப்பது வாய்ப்புடன் பார்க்கப்படுகிறது.

Also Read: தளபதி 67 விஜய் சேதுபதி இடத்தை பிடிக்கும் விக்ரம்.. மீண்டும் பயத்தில் விஜய்

இதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் வசூலில் மிரட்டி விட்ட விக்ரம் படத்தில் சில நிமிடம் மட்டுமே ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தாலும், அந்தக் கேரக்டருக்கு அவ்வளவு பவர் கொடுத்தார். ஹீரோ இல்லாத கதாபாத்திரத்திற்கு சூர்யா இவ்வளவு மெனக்கெட்டது கமலஹாசனையே ஆச்சரியப்படுத்தியதாம்.

அதுமட்டுமில்லை எந்த கமர்சியல் நோக்கமும் இல்லாமல் சூரரைப் போற்று படத்தில் வேறு எந்த கதாநாயகன்களாலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி மாஸ் காட்டியதால் உண்மையாகவே அவர் உலக நாயகன் தான்.

Also Read: கிசு கிசுப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்.. விஜய்க்கு கொடுத்த மிகப்பெரிய ஷாக்

Trending News