ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ரஜினி, விஜய்யை சம்பளத்தில் ஓரங்கட்டிய கமல்ஹாசன்.. ஒரே வெற்றி எங்கேயோ போயிட்டாரு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதாவது இப்படி ஒரு வசூலை தமிழ் சினிமா இதுவரை கண்டது கிடையாது.

அந்த அளவுக்கு விக்ரம் திரைப்படம் வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனால் பட குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கமலின் சம்பளம் கூட இந்த வெற்றியால் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

இதுவரை கமல் தன்னுடைய படங்களுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்தார். காரணம் அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக பலரையும் கவர்ந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் அந்த படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யவில்லை.

ஆனால் அவரின் விக்ரம் திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸையே கலக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அவருடைய சம்பளமும் அதிகரித்துள்ளது. விக்ரம் திரைப்படத்தில் அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுவரைக்கும் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். அதற்கு அடுத்ததாக விஜய் 120 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். ஆனால் தற்போது கமல் அவர்களை எல்லாம் ஓரம் கட்டி சம்பள விஷயத்தில் முன்னணியில் இருக்கிறார்.

இப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய ஒரே நடிகர் கமல்ஹாசன் தான் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படங்களில் அவருடைய சம்பளம் இன்னும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விக்ரம் திரைப்படத்தின் மூலம் கமலஹாசன் தற்போது உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News