கமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பு, நடனம், பாட்டு, இயக்கம் அனைத்திலும் சாதனையை பார்த்தவர். இத்துடன் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அப்படி இவர் தயாரித்து சரித்திரம் படைத்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
மகளிர் மட்டும்: சிங்கீதம் சீனிவாச ராவ் 1994 ஆம் ஆண்டு மகளிர் மட்டும் திரைப்படம் மிகவும் நையாண்டி திரைப்படமாக வெளிவந்தது. இத் திரைப்படத்தை கமலஹாசன் தயாரித்து கிரேஸி மோகன் வசனம் எழுதினார். இதில் ரேவதி, ஊர்வசி, ரோகிணி மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த கதை மூன்று பெண்கள் தங்களை தொடர்ந்து துன்புறுத்தும் அலுவலக முதலாளிக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக இந்த படம் அமைந்திருக்கும். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விருதை இத்திரைப்படம் வென்றது.
Also read: கமலுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நாசர் நடித்து அசத்திய 5 படங்கள்.. பத்ரியாய் மிரட்டிய குருதிப்புனல்
குருதிப்புனல்: பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு குருதிப்புனல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்தது. இத் திரைப்படத்தை கமலஹாசன் தயாரித்து எழுதியுள்ளார். இதில் கமல்,அர்ஜுன், நாசர், கௌதமி மற்றும் கீதா ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் டால்பி ப்ரோ லாஜிக் சவுண்ட் எஸ்ஆர் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் இந்திய திரைப்படமாகும். இது திரைப்பட ஒலியின் நான்கு சேனல்களை இரண்டாக குறைக்க செய்யப்பட்டது.
இது விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
விருமாண்டி: 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படம் கமலஹாசன் எழுதி தயாரிப்பில் வெளிவந்தது. இப்படத்தில் கமல், அபிராமி, நெப்போலியன் மற்றும் நாசர் ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படம் இரண்டு சிறைக் கைதிகளின் கதைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். முதலில் கொத்தலா தேவர் பசுபதி ஆயுள் தண்டனை, இரண்டாவதாக தூக்கிலிடப்படும் விருமாண்டி, இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்று மற்றும் வணிக ரீதியாகவும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது.
Also read: கமலஹாசனை 100 தடவை பார்க்கத் தூண்டிய படம்.. இந்த படத்தின் பிரதிபலிப்புதான் விருமாண்டி
ஹேராம்: 2000ஆம் ஆண்டு வெளிவந்த ஹேராம் திரைப்படத்தை கமலஹாசன் எழுதி, இயக்கி, தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடித்தார். இத்திரைப்படம் மகாத்மா காந்தியின் படுகொலையை சித்தரிக்கும் ஒரு மாற்று வரலாற்று திரைப்படமாக வெளிவந்தது. இப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது. இது தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.
தேவர் மகன்: 1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் தேவர் மகன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, நடிப்பு என அனைத்தும் செய்தது கமல் தான். இதில் கமல்,சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் கமல் வெளிநாட்டில் படித்து அங்கே ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக சொந்த ஊரான கிராமத்துக்கு வந்தவர், கிராமத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் அங்கேயே இருந்து அப்பாவின் ஆசைப்படி கிராமத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதாக இந்த கதை அமைக்கப்பட்டிருக்கும். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி இயக்குனருக்கும் ஒரு ரோல் மாடலாக இந்த படம் அமைந்திருக்கும்.
Also read: தேவர் மகன் 2 இயக்குனர் யார் தெரியுமா.? விறுவிறுப்பாக தொடங்கவுள்ள படப்பிடிப்பு