வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இந்த 5 படங்களின் காட்சிகளை தத்ரூபமாக காட்ட கமல் எடுத்த ரிஸ்க்.. மிரண்டு போன இந்திய சினிமா

நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் அனைத்துமே மிகவும் யதார்த்தமாகவும், தத்ரூபமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவரின் ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் ரசிகர்கள் கதையோடு ஒன்றிப் போய் விடுவார்கள். இதுதான் அவருடைய வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

இதற்காக கமல் நிறைய விஷயங்களை மெனக்கெட்டு செய்வார். ஒரு படம் அவர் நினைத்தபடி தத்ரூபமாக வரவேண்டும் என்றால் அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அதனால் தான் ரசிகர்கள் அவரை உலக நாயகன் என்றும் ஆண்டவர் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். அப்படி அவர் படங்களுக்காக மெனக்கெட்டு செய்த சில வேலைகளைப் பற்றி இங்கு காண்போம்.

பஞ்சதந்திரம்: நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் 5 ஹீரோக்கள் நடித்திருந்தனர். கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஶ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து அசத்தி இருப்பார்கள்.

இந்தப் படத்தில் கமல் படத்தின் பெயருக்கு ஏற்ப ஐந்து என்ற எண் அனைத்து இடங்களிலும் வரும்படி காட்டியிருப்பார். உதாரணமாக ஹோட்டல் ரூம், ப்ளோர், அவர்கள் செல்லும் கார் என்று அனைத்திலும் இந்த நம்பர் இருக்கும். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் தெரியாத மற்றொரு விஷயமும் அதில் இடம் பெற்றிருக்கும்.

அதாவது கமல் ஆளவந்தான் திரைப்படத்தில் பெண்கள் ஒரு சிலந்தி என்று கூறியிருப்பார். அதை உணர்த்தும் விதமாக பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கழுத்தில் அணிந்திருக்கும் செயினில் சிலந்தி டாலர் இருக்கும். இதை நம்மில் பலரும் கவனித்திருக்க மாட்டோம். ஆனால் இந்தச் சின்ன விஷயத்தைக் கூட கமல் விட்டுவைக்காமல் நேர்த்தியாக எழுதி இருக்கார்.

மைக்கேல் மதன காமராஜன்: இந்தப் படத்தில் கமல் 4 கெட்டப்புகளில் நடித்து அசத்தி இருப்பார். அதை குறிப்பிடும் விதமாக படத்தில் இடம் பெற்றிருந்த பல காட்சிகளில் 4 என்ற எண் இருக்கும். கிரேசி மோகனின் வசனத்தில் கமல் இந்த படத்தில் நான்கு விதமான மாடுலேஷனில் பேசுவார். அந்த வகையில் இந்த திரைப்படம் கமல் ரசிகர்களை கவர்ந்த ஒரு படமாக இருக்கிறது.

தேவர் மகன்: சிவாஜி, கமல், ரேவதி, கௌதமி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் இன்றும் ரசிகர்களின் பேவரைட் திரைப்படம். இந்தப் படத்தில் கமல் ஹோட்டல் ஆரம்பிப்பது பற்றி சிவாஜியிடம் பேசுவார். அந்த காட்சியில் அவர் தற்போது உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவுகளை பற்றி அப்போதே கூறி மிரள வைத்து இருப்பார். அந்த வகையில் கமல் ஒரு தீர்க்கதரிசி தான்.

விருமாண்டி: முரட்டு கிராமத்து ஆளாக கமல் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தேனியில் வாழும் மக்கள் குறித்த பல விஷயங்கள் அடங்கி இருக்கும். அதாவது தேனியில் இருக்கும் மக்கள் ஈசலை பதப்படுத்தி சமைத்து உண்ணுவார்கள். இது மிகவும் மருத்துவ குணம் நிறைந்த உணவாகும். அந்த ஈசல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பல இடத்தில் வரும்.

அதேபோன்று படத்தில் பத்திரிகையாளராக வரும் ரோஹினி தன்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே கீழ்வென்னி என்று போலீசாரிடம் கூறுவார். சில காலங்களுக்கு முன்பு அந்த ஊரில் அடிமையாக வாழ்ந்த மக்கள் போலீஸ் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டனர். அதைப்பற்றி கூறுவதற்காகவே கமல் அந்த படத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்தார்.

அன்பே சிவம்: கமல், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கமலின் மாறுபட்ட நடிப்பை நமக்கு காட்டியது. இப்படத்தில் அன்புதான் கடவுள் என்று கமல் அடிக்கடி கூறுவார். அதைக் குறிக்கும் விதமாக கமல் நாயிடம் அன்பு காட்டி மாதவனுக்கு புரிய வைப்பார்.

இப்படி கமல் பல திரைப்படங்களில் சிறு காட்சிகளைக் கூட விட்டுவைக்காமல் மிகவும் தத்துரூபமாக காட்டியிருப்பார். அதனால்தான் அவரை ஆண்டவர் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

Trending News