வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இந்தியன் 2 கற்றுக் கொடுத்த பாடம்.. உஷாரா தக்லைப்பில் கமல் மணிரத்தினத்துக்கு போட்ட கேட்

சங்கருக்கு இந்தியன் 2 படம் மோசமான அவப்பெயரை பெற்றுக் கொடுத்தது. படத்தில் ஒரு காட்சி கூட  நல்லா இல்லை என எல்லா பக்கமும் விமர்சனங்கள் பரவியது. இது படத்தின் வசூலுக்கும் பெரிய அடியாய் அமைந்தது. இதற்கெல்லாம் காரணம் அந்த படம் 4 வருடங்கள் நிலுவையில் இருந்தது தான் என்கின்றனர்.

 இந்தியன் 2 படத்திற்கு முதலிலேயே ரிலீஸ் மாதத்தை அறிவித்து விட்டனர். படம் முடிவதற்கு 6 மாதங்கள் முந்தியே  படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறிவிட்டனர். தேதியை மட்டும் அறிவிக்கவில்லை. படம் முழுவதுமாக முடிவதற்கு முன்பே எதிர்பார்ப்பு  கூடியது.

 இதனால் அவசரமாக பல விஷயங்கள் படத்தில் செய்யப்பட இருந்ததையும் மறந்து படத்தை முடிக்கணும் என்ற எண்ணத்திலேயே விறுவிறுப்பாக வேலையை பார்த்தனர். அதுவே அவர்களுக்கு பாதகமாய் அமைந்தது. இதனால் இனிவரும் காலங்களில் இது நடக்கக்கூடாது என கமல் அப்போதே முடிவெடுத்துவிட்டார்.

உஷாரா தக்லைப்பில் கமல் மணிரத்தினத்துக்கு போட்ட கேட்

இப்பொழுது கமல் நடித்துக் கொண்டிருக்கும் மணிரத்தினத்தின் தக்லைஃப் படம் அடுத்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் தான் வெளிவருமாம். படத்திற்கு போதிய அவகாசம் வேண்டுமென இப்பவே மனிதத்தனத்திடம் கேட்டுக் கொண்டார் கமல்.

தக் லைஃப் படத்தை கிறிஸ்மஸ் அன்று டிசம்பர் 25 வெளியிடலாம் என மணிரத்தினம் முடிவு  செய்திருந்தார். ஆனால் அதற்கு கமல் இப்பொழுது முட்டுக்கட்டை போட்டு விட்டார். படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிய நேரமாகும் அதனால் இப்பொழுது தேதியை அறிவிக்க வேண்டாம், அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டாராம்.

- Advertisement -

Trending News