திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமல், ரஜினி இணைந்து நடித்த மொத்த படங்கள்.. அதில் இத்தனை வெற்றி படங்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமலஹாசனும் இன்றைய கோலிவுட்டின் பிரம்மாக்களாக இருப்பவர்கள். இன்றைய டாப் ஸ்டார்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றவர்களுக்கு நடிப்பின் பல்கலைகழகமாக இருப்பவர்கள் இவர்கள் இருவரும். இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளில் இருந்து, நடிக்கும் ஸ்டைல் வரைக்கும் இருவரின் பாதையும் வேறுபட்டது.

ஆனால் ஒரு காலத்தில் இவர்கள் இருவருமே பயணித்த பாதை ஒன்று தான். சொல்லப்போனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா வாழ்க்கை தொடங்கியதே கமலஹாசனின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தான். 80 களில் இவர்கள் இருவருமே வளர்ந்து வரும் ஹீரோக்களாக மாறினர். இருவருக்குமே ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது.

Also Read : 70, 80களில் ஹீரோ, வில்லன் இரண்டிலும் பேர் வாங்கிய நடிகர்.. கமல், ரஜினிக்காக செய்த தியாகம்

ரஜினி, கமலுக்கு இருக்கும் மிகப் பெரிய ஒற்றுமை என்னவென்றால் இருவருமே இயக்குனர் இமயம் பாலச்சந்தரின் அறிமுகங்கள். எனவே இவர்கள் கூட்டுக்குடும்பம் போலவே இருந்தார்கள். பாலச்சந்தர் படங்களில் இவர்கள் இருவருமே இருப்பார்கள். ஒவ்வொரு சீனிலும் எப்படி நடிக்க வேண்டும் என்று கூட மாற்றி மாற்றி யோசனை சொல்லிக் கொள்வார்களாம்.

ரஜினிகாந்தும், கமலஹாசனும் இதுவரை 13 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் அப்படிதான், பதினாறு வயதினிலே, அவர்கள், ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது , அலாவுதீனும் அற்புத விளக்கும், நட்சத்திரம், தில்லு முல்லு, அக்னி சாட்சி போன்ற படங்கள் இவர்களது நடிப்பில் வெளியானவை.ல் ஆடுகிறது, தப்பு தாளங்கள், தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இ

Also Read : கமல் தனக்கே உரிய காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. எப்போதுமே ரசிக்கும்படி செய்த தெனாலி

இந்த படங்களில் மூன்று முடிச்சு. பதினாறு வயதினிலே, அவள் அப்படிதான், தப்பு தாளங்கள், அவர்கள், நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. அதிலும் பதினாறு வயதினிலே பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. பதினாறு வயதினிலே சப்பாணி, பரட்டையை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.

இதில் அலாவுதீனும் அற்புத விளக்கும், இளமை ஊஞ்சல் ஆடுகிறது போன்ற படங்கள் சொல்லிக்கொள்ளும் படி வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த 13 படங்களில் 7 படங்கள் டாப் ஹிட் ஆனது. பின்னாட்களில் இவர்கள் இருவருமே சேர்ந்து நடிப்பதில்லை என முடிவெடுத்து தனித்தனியாக பயணிக்க ஆரம்பித்தனர்.

Also Read : 80-களில் கமலஹாசன் செய்த சாதனை.. இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை

Trending News