வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிறுவனம்.. காற்றில் பறந்த வாக்குறுதி, வாய்க்கு பூட்டு போட்ட கமல், ரஜினி, விஜய், சூர்யா

Rajini-Kamal-Vijay-Suriya: இப்போதெல்லாம் சமூக பிரச்சனையை மையப்படுத்தி வெளிவரும் படங்கள் அதிகமாகி விட்டது. அதிலும் டாப் ஹீரோக்கள் முக்கிய பிரச்சினையை கையில் எடுத்து நடித்து பாராட்டுகளை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த சமூக நியாயம் எல்லாம் வெறும் படத்தில் மட்டும் தானா என்று நம்மை யோசிக்க வைக்கும் வகையில் தான் அவர்களுடைய நிஜ முகங்கள் இருக்கின்றன.

அதாவது திரைப்படங்களில் அநியாயத்திற்கு எதிராக துடிக்கும் ஹீரோக்கள் நிஜத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்பதில்லை. அப்படித்தான் தற்போது விவசாயிகளின் பிரச்சனை ஒன்று பலரின் கவனத்திற்கு வராமல் போயிருக்கிறது. அதாவது கடலூரில் 24 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தற்போது கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

Also read: 40 வயதிலும் கொள்ள அழகுடன் சுற்றும் 6 நடிகைகள்.. சூர்யாவின் அன்பால் எப்போதும் ஜொலிக்கும் ஜோ

மூன்று பருவங்களும் விளையும் அந்த நிலங்களை சுரங்கப் பணி விரிவாக்கத்திற்காக என்.எல்.சி நிறுவனம் கையகப்படுத்தி வருகிறது. அதை எதிர்த்து தற்போது கடலூரில் மிகப்பெரும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்படாமல் இருக்கிறது. அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்கவில்லை.

ஆனால் இதற்கு தீர்வு கிடைத்தே தீர வேண்டும் என தற்போது சோசியல் மீடியாவில் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமூகநீதி படங்களை எடுத்து கல்லாகட்டி வரும் கமல், விஜய், சூர்யா, ரஜினி போன்ற டாப் ஹீரோக்கள் கூட இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் பூட்டு போட்டு இருக்கின்றனர்.

Also read: கமலால் தாமதமாகும் விடாமுயற்சி.. எல்லாம் கை கூடி வரும் போது இப்படியா நடக்கணும்

அதிலும் கமல்ஹாசன் இது போன்ற பிரச்சனைகள் என்றால் முதல் ஆளாக குரல் கொடுத்து விடுவார். ஆனால் இப்போது வரை ஒரு அறிக்கை கூட அவர் தரவில்லை. அதேபோன்று விவசாயிகளின் கஷ்டத்தை பற்றி கத்தி படம் மூலம் வாய் கிழிய பேசிய விஜய் கூட அமைதியாக தான் இருக்கிறார். மேலும் பல நல்ல விஷயங்களை செய்து வரும் சூர்யா, ரஜினி போன்ற ஹீரோக்களும் மௌன சாமியாராக இருக்கின்றனர்.

அப்படி என்றால் விவசாயிகளின் பிரச்சனை பொது பிரச்சனை கிடையாதா அல்லது நடிகர்கள் அரசுக்கு எதிராக வாய் திறக்க அச்சப்படுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஆளும் கட்சி தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் கூட விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தெரிவித்திருந்தனர்.

Also read: கடைசியா ஓடின படம் எதுவுமே தெரியல.. 10 வருடமாய் ஹிட் கொடுக்கல, கமலை வைத்து பப்ளிசிட்டி தேடும் ஹீரோ

ஆனால் அந்த வாக்குறுதி இப்போது காற்றில் பறந்து விட்டது. மேலும் தற்போது கடலூரில் பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பாழ்படுத்தப்பட்டு வருகிறது. கண்முன்னே இப்படி ஒரு அநியாயம் நடப்பதை தடுக்க முடியாமல் விவசாயிகளும் அவர்கள் வீட்டுப் பெண்களும் தற்போது கதறி வருகின்றனர். அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒன்றிணைந்த நடிகர்களும், மக்களும் மீண்டும் ஒருமுறை குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதனால் விரைவில் அரசு இதற்கான தீர்வை கொண்டு வர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Trending News