திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வனை கண்டுக்காத கமல், ரஜினி.. சைலன்டாக ஆட்டி வைக்கும் பெரிய இடம்

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பொன்னியின் செல்வன் கடந்த வாரம் வெளியானது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் வெளியான இரண்டு நாளிலேயே 100 கோடியை தாண்டி சாதனை படைத்தது.

தற்போது ஒரு வாரத்தை நெருங்க இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் உலக அளவில் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இனிவரும் நாட்களில் இப்படம் 500 கோடியை தாண்டி சாதனை புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:ரஜினியை வைத்து பல லட்ச ரூபாய் மோசடி.. இந்த பொழப்புக்கு எங்கேயாவது போய் பிச்சை எடுங்க

சோழர்களின் வரலாற்றை அப்படியே கண் முன்பு நிறுத்திய இந்த பொன்னியின் செல்வனை ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். தத்ரூபமாக ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் பார்த்து பார்த்து செதுக்கிய மணிரத்தினம் தற்போது ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க படத்தைப் பற்றி கமல், ரஜினி என்ற இரு பெரும் ஜாம்பவான்களும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி பேசி மிகப் பெரிய பிரமோஷன் செய்த அவர்கள் இருவரும் படம் வெளியான பிறகு இதுவரை வாய் திறக்காமல் இருக்கின்றனர்.

Also read:களை கட்டும் பிக் பாஸ் சீசன் 6.. உறுதியான 6 போட்டியாளர்கள்

பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக கூறுகின்றனர். அதாவது இந்த திரைப்படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் கைப்பற்ற நினைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் மணிரத்தினம் போட்ட திட்டம் படி தயாரிப்பு நிறுவனமே படத்தை வெளியிட்டது.

அந்த வகையில் வசூல் லாபம் முழுவதும் தற்போது மணிரத்தினம் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷனுக்கு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் பெரிய அளவில் லாபம் பார்க்க நினைத்த உதயநிதிக்கு இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அதனால் தான் அவர் இப்படத்திற்கு எந்த வாழ்த்து செய்திகளும் வர முடியாத படி செய்துள்ளதாகவும் திரை உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் கழிந்த நிலையில் தான் ரஜினி ஜெயம் ரவியின் நடிப்பை பாராட்டி இருக்கிறார். இந்த செய்தியை ஜெயம் ரவி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதுதான் தற்போது திரை உலகின் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

Also read:ஆதித்த கரிகாலனாக நடிக்க இருந்த வந்திய தேவன்.. கடைசியில் மணிரத்னம் வைத்த டிவிஸ்ட்

Trending News