வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆர்யா மீது கொடூர காண்டோடு திரியும் கமல்.. அமெரிக்கா சென்றும் கூட முடியாத சண்டை

கிராமத்து கதைகளில் பட்டையை கிளப்பும் இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் முத்தையா மற்றும் கமலஹாசன் இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.

முத்தையா சொன்ன கதையை கேட்ட கமல் இந்த படத்தை கண்டிப்பாக பண்ணியே ஆக வேண்டும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். முதலில் கமலுக்காக தான் இந்த கதையை முத்தையா தயார் செய்துள்ளார். ஆனால் கமலுக்கு வயதாகி விட்டதாலும், படத்தில் சில மாற்றங்கள் தேவைப்பட்டதாலும் இந்த படத்தில் கமலுக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்கலாம் என யோசித்து உள்ளனர்.

ஆனால் இப்படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை போலவே இப்போது முத்தையா தயாரிக்கும் படமும் கிராமத்து கதை கொண்டதால் இப்படத்தில் ஆர்யாவை நடிக்க வைக்கலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்தது.

மேலும் இப்படத்திற்காக ஆர்யாவுக்கு 15 கோடிகள் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆர்யா இப்படத்தை கமல் தயாரிப்பில் எடுக்க வேண்டாம், வேறு ஒரு தயாரிப்பாளரை நாடலாம் என இயக்குனர் முத்தையாவுக்கு ஐடியா கொடுத்து கமலிடம் இருந்து விலக செய்திருக்கிறார்.

இதனை அறிந்த கமல், ஆர்யா மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளார். படத்தின் கதை நன்றாக இருக்கிறது ஆர்யா பேச்சைக்கேட்டு படத்தை பாழாக்கி விடாதீர்கள். நாம் வேண்டுமானாலும் இந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று முத்தையாவிடம் தூதுவிட்டு இருக்கிறார் கமல்.

தற்போது கமல் அடுத்த பட வேலைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்தே கொம்பன் முத்தையா படத்திற்காக கமல், ஆர்யா இடையே போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடைசியில் முத்தையா யாரை வைத்து இந்த படத்தை இயக்கப் போகிறார் என்பது மிக விரைவில் தெரியவரும்.

Trending News