திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காதுல பூ சுத்துன கமல், சிவகார்த்திகேயன்.. உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா.!

சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக இருக்கும் கமலஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் அவர்களது படங்களில் தற்பொழுது பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசன், சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கப் போவதாக ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தார். இந்த தகவல் ஆனது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு தற்பொழுது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். அதிலும் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் படத்தின் போஸ்டர் ஆனது இணையத்தில் வெளியாகிய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Also Read: மீண்டும் கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை .. சிவகார்த்திகேயன் கையில் இருந்த படமும் நழுவியதா ? பரிதாபம்

மேலும் உலகநாயகன் கமலஹாசன் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இவரது நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பானது கடப்பாவில் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில்  தொகுப்பாளராக இருந்து வருகிறார் கமல்.

அதில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பின் மூலம் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கப் போவதாக தகவல் ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதிலும் சிவா நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இவர் இதற்கு முன் கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: விஜய் டீலில் விட்டதால் சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைந்த திருட்டு இயக்குனர்.. வேற லெவல் சம்பவம் இருக்கு

மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படம்  தீவிரவாதிகள் பற்றிய கதையினை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. இதனால் படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில், அதுவும் பனிப்பொழிவு சமயத்தில் நடத்த பிளான் போட்டுள்ளனர். அதுவும் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் படத்தின் ஷூட்டிங் ஆனது தொடங்கும் என்று தெரிவித்தும் இருந்தனர்.

ஆனால் தற்பொழுது ஜனவரி மாதமே முடிந்துவிட்ட நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெறுமா, நடைபெறாதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சிவாவை வைத்து படம் பண்ண போவதாக அறிக்கையினை வெளியிட்ட கமலஹாசனை பார்த்து உங்கள் உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா என்பது போல் விமர்சகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Also Read: பழைய சந்துருவாக மாறிய கமல்.. விவாகரத்து நடிகையுடன் உலக நாயகன் செய்த ஒர்க் அவுட் புகைப்படம்

Trending News