புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மணிரத்னம், ஹெச் வினோத்துக்கு சங்கு ஊதும் கமல்.. நூடுல்ஸ் போல் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட உலகநாயகன்

Actor Kamal: நான்கு வயதிலிருந்தே சினிமாவில் ஊறி இருக்கும் உலகநாயகன் கமலஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தின் 100 நாள் ஷூட்டிங்கை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இப்போது கமல் நூடுல்ஸ் போல் வசமா சிக்கிக்கொண்டார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமலஹாசன் கமிட்டானார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஹெச் வினோத் உலக நாயகனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி துவங்கலாம் என்று இருந்தார். இதற்காக படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும்
பக்காவாக ரெடி பண்ணிட்டு, படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளை எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறார்.

இவர் மட்டுமல்ல அடுத்ததாக கமலை வைத்து மணிரத்தினமும் ஒரு படத்தை எடுக்க போகிறார். ஆனால் இப்போது உலக நாயகன் பிரபாஸ் உடன் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பதற்கு 150 கோடி சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிக்கிறார்.

இதற்கிடையில் அரசியலிலும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் கமலஹாசன், வரும் 2024-ம் ஆண்டு நடக்கப் போகும் மக்களவை பொது தேர்தலிலும் களம் காண போகிறார். அதற்காக எல்லா மாவட்டங்களிலும் கண்டிப்பாக போய் பிரச்சாரம் செய்யணும்.

அப்படி இருக்கும் போது எப்படி அவர் மணிரத்தினம் மற்றும் ஹெச் வினோத் படத்தில் நடிக்க முடியும். இந்த இரண்டு இயக்குனர்களின் படங்கள் மிக முக்கியமானவை என்பதை கமல் புரிந்து கொண்டதால்தான் அவர்களது படத்தில் கமிட் ஆனார்.

ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் ‘மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை’ என்பது போல் தான் கமலின் நிலை ஆகிவிட்டது. இவருடைய படத்திற்காக ஹெச் வினோத் மற்றும் மணிரத்தினம் இருவரும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது அதற்கெல்லாம் உலகநாயகன் சைலண்டாக சங்கு ஊத போகிறார்.

Trending News