வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பெண் கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் வீடு.. விஜய் டிவி டிஆர்பிக்காக ஒத்து ஊதும் கமலின் மறுபக்கம்

Biggboss 7: கடந்த சில நாட்களாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. ஏற்கனவே இது ஒரு கலாச்சார சீர்கேடு என்று பல கலைஞர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனாலும் ஏழு சீசன்களாக இந்த ஷோ வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இந்த சீசன் பெண் போட்டியாளர்களை பார்க்கும்போது நிச்சயம் இதற்கு மேல் இந்த நிகழ்ச்சி தொடரக்கூடாது என்று தான் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவர்கள் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுவது, நடந்து கொள்வது என பார்வையாளர்களை எரிச்சல் படுத்தி வருகின்றனர். அதில் மாயா, பூர்ணிமா இருவரும் செய்யும் அடாவடித்தனம் எல்லை மீறி கொண்டிருக்கிறது.

தான் ஜெயிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற ரீதியில் இவர்கள் பெண்களின் பாதுகாப்பையும் ஒரு அஸ்திரமாக பயன்படுத்தி இருக்கின்றனர். அதற்கு கமலும் ஒரு காரணமாக இருப்பது தான் நம்ப முடியாத ஆச்சரியம். தற்போது சோசியல் மீடியாவில் கொடுமைக்கார கும்பல் என்ன அழைக்கப்பட்டு வரும் இவர்கள் பிரதீப் மேல் இருந்த வன்மத்தை சரியான நேரத்தில் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

Also read: முதல்ல ஆம்பளைங்க கற்புக்கு கேரண்டி கொடுங்க ஆண்டவரே.! நாராசமாக பேசும் பிக்பாஸ் அராத்திகள்

எப்படா நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் கூல் சுரேஷ் விஷயத்தை கையில் எடுத்து அதில் பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தை ஆழமாக விதைத்து விட்டனர். ஏனென்றால் இப்படி ஒரு வார்த்தையை கூறும் போது ஆண்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இதில் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் கமல் தீர்ப்பு வழங்கியது தான் கொடுமையின் உச்சகட்டம். அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் இவர்கள் எங்களோட பாதுகாப்புக்கு ஆபத்து என்ற வார்த்தையை தூக்கிக் கொண்டு அலைகின்றனர். இதற்கும் உலக நாயகனே மூல காரணம். இது தற்போது பலருக்கும் தவறான முன்னுதாரணமாக இருக்கிறது.

அப்ப நமக்கு பிடிக்காத ஆண்களை பழிவாங்க இப்படி ஒரு விஷயம் இருக்கா என்று தோன்றும் வகையில் நகர்கிறது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. அதனாலேயே கலாச்சாரத்தை மொத்தமாக சீரழிக்கும் இந்த ஷோ நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். ஆக மொத்தம் விஜய் டிவியின் டிஆர்பிக்காக ஒத்து ஊதும் கமல் இப்போது மக்களின் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Also read: மாட்டிக்கிட்டே பங்கு இந்த அவமானம் தேவையா.! நிக்சனின் கேவலமான புத்தியை குறும்படம் போட்ட பிக்பாஸ்

Trending News