வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

தங்க முட்டையிடும் வாத்தை குழம்பு வைத்த கமல்.. பலாக்காயை விட்டு கலாக்காய்க்கு ஆசைப்பட்ட ஆண்டவர்

Kamal: பொதுவாக கமல் நடித்த படங்களிலேயே ஒரு சில படங்கள்தான் விமர்சன ரீதியாக, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் சில காலங்கள் கடந்த பிறகு எந்த படத்தை மக்கள் புறக்கணித்தார்களோ, அதே படம் பேசும் படமாக சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் ஒரு சில படங்கள் அப்போது இருந்து இப்பொழுது வரை தூக்கி கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது இந்தியன் படம் தான். இப்படிப்பட்ட ஒரு படம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தற்போது வரை நிலைத்து நிற்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் வெளிவந்த இரண்டாம் பாகம் மொத்தத்திற்கும் எதிர்மாறாக கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை முற்றிலுமாக தோற்கடித்து விட்டது.

பட்டி டிங்கிரி பார்க்கும் கமல்

அந்த வகையில் இந்தியன் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், துவண்டு போன மொத்த டீமும் இந்தியன் 3 படத்தையாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கமல், இந்தியன் 3 படத்தின் கதையில் மொத்தமாக புகுந்து எல்லாத்தையும் நான் மாற்றி எழுதுகிறேன் என்று கதை வேறு விதமாக கொண்டு வருகிறாராம்.

இதனால் இவரை நம்பி இருக்கும் எச் வினோத் கேள்விக்குறியாக இருக்கிறார். ஏனென்றால் இவருடன் ஒரு படம் பண்ணுவதாக கமல் வாக்குறுதி கொடுத்து அவரை கையோடு ராஜ்கமல் பிலிம்ஸ் ஆபிஸில் இருக்க வைத்திருக்கிறார். அவரும் கமலை நம்பி ஒரு அருமையான கதையை ரெடி பண்ணி வைத்திருக்கிறார்.

ஆனால் தற்போது இதையெல்லாம் வேண்டாம் என்று சொல்வதற்கு ஏற்ப கமலின் முழு கவனமும் இந்தியன் 3 மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்லைப் படத்தில் மட்டும் தான் இருக்கிறது. இதனால் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் எச் வினோத் தவித்து வருகிறார். ஆனாலும் கமல் இதுவரை எதுவும் சொல்லாததால் தொடர்ந்து ராஜ்கமல் ஆபீசில் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவருடைய ஒரு நாள் செலவு வெறும் 400 ரூபாய் மட்டும் தானாம். அதிலேயே இவருடைய சாப்பாடு மற்றும் மற்ற செலவுகளையும் பார்த்துக் கொள்கிறார். மேலும் இவர்கள் கூட்டணியில் உருவாகப் போகும் படமும் 100 கோடி பட்ஜெட் தான். அப்படி என்றால் இப்படி ஒரு இயக்குனரை கையில் வைத்துக் கொண்டு பறக்க ஆசைப்படும் கமல், தங்க முட்டையிடும் வாத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்.

ஏனென்றால் அட்லி போன்ற சில இயக்குனர்களின் டிபன் செலவு மட்டுமே 5000 ரூபாய் வர செலவு பண்ணுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது எச் வினோத், கமலுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். கம்மி பட்ஜெட்டில் அதிக லாபத்தை கொடுக்கும் தங்க முட்டையை விட்டுட்டு பெய்லியர் ஆனா இந்தியன் படத்தை பட்டி டிங்கிரி பார்த்து ஜெயிக்க வைத்ததற்கு ஆசைப்பட்டு வருகிறார்.

இந்தியன் 2 படத்திற்கு கிடைத்த விமர்சனம்

- Advertisement -spot_img

Trending News