வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

ஆண்டவரே என்ன விட்டுடுங்க.. மனசாட்சியே இல்லாமல் சிம்புவை வச்சு செய்யும் கமல்

Actor Simbu: கமல் தயாரிப்பில் சிம்புவின் 48வது பட அறிவிப்பு எப்போதோ வெளிவந்துவிட்டது. பீரியட் கால படமாக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த ப்ராஜெக்ட்டுக்காக சிம்பு கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டார்.

கடந்த மாதம் அவரது பிறந்த நாளில் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் என்ன பிரயோஜனம். இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை.

சிம்புவும் ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கிறார். ஆனால் ஆண்டவரோ அவருடைய படங்களில் கவனம் செலுத்துகிறாரே தவிர இதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

சிம்புவை வச்சு செய்யும் கமல்

அதனால் அவர் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு போன் போட்டு அடுத்த படம் பண்ணலாம் என கதறி உள்ளார். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

கமல் சிம்புவுக்கு பச்சைக்கொடி காட்டினால் தான் அவர் அடுத்த படத்தில் நடிக்க முடியும். ஆனால் ஆண்டவரோ மனசாட்சியே இல்லாமல் அவரை வச்சி செய்து வருகிறார்.

இப்படியே போனால் சிம்புவை ரசிகர்கள் மறந்தாலும் மறந்து விடுவார்கள். இப்போது தான் அவர் எந்த சேட்டையும் பண்ணாமல் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கிறார். ஆண்டவர் அதை கெடுத்து விடுவார் போல.

Trending News