வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

40 வருட ராஜதந்திரத்தை பயன்படுத்தும் கமல்.. இயக்குனரை பகடைகாயாக யூஸ் பண்ணும் ரங்கராய நாயக்கர்

Kamalhassan: கமலின் பேச்சுக்கும் நடிப்புக்கும் ஈடு இணையாக வேறு யாரும் இல்லை என்பதற்கு ஏற்ப சினிமாவில் பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டு என்சைக்ளோபீடியா என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறார். அத்துடன் பல வருடங்களுக்கு முன் இவர் நடித்த படங்கள் யாருமே கண்டு கொள்ளாத நிலையில், விக்ரம் படத்திற்கு பிறகு இவரை தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து நடிப்பிலும் தயாரிப்பாளராகவும் பிஸியாகிவிட்டார். அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் கதை அதிகமாக இருப்பதால் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமும் உருவாக்கப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. அதனால் அதிலும் கமல் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் பிரபாஸ் நடித்துக் கொண்டிருக்கும் கல்கி படத்திலும் கமல் கமிட்டாகி இருக்கிறார். அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கமிட் ஆகிவிட்டார். இந்த படத்திற்கான பிரமோஷன் வீடியோ கொஞ்சம் நாட்களுக்கு முன் வெளியானது. இந்த வீடியோவை பார்த்து அனைவரும் அசந்து போய்விட்டார்கள். அந்த அளவிற்கு கமலின் பேச்சும் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறது.

Also read: 20 நாளைக்கு 150 கோடி சும்மா குடுத்துடுவோமா.? கல்கிக்காக கமல் வாங்கிய சம்பளத்தின் பின்னணி இதுதான்

அத்துடன் அந்த வீடியோவை பார்க்கும் பொழுது கண்டிப்பாக தக் லைஃப் படம் ஹிஸ்டாரிக்கல் மூவியாக தான் வரப்போகிறது. அப்படி மட்டும் இருந்தால் தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு போய்விடும் என்று ரசிகர்கள் மிகவும் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது வெளிவந்த தகவலின் படி தக் லைஃப் படம் ஹிஸ்டாரிக்கல் மூவியாக இருக்கப் போவதில்லை.

இப்போ நடக்கிற கதையே தான் மணிரத்தினம் எடுக்கப் போகிறார். ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொண்ட கமல் எல்லோருக்கும் இப்படத்தின் மீது ஒரு ஹைப் இருக்க வேண்டும். அத்துடன் அனைவரும் இதைப் பற்றி பேச வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக கமல் இந்த மாதிரி ஒரு பில்டப்பை இயக்குனரிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். அதனால் இயக்குனர் மணிரத்தினமும் வேறு வழி இல்லாமல் கமல் செல்வதை அப்படியே செய்திருக்கிறார்.

இதே மாதிரி தான் விக்ரம் படமும் வெற்றியடைந்ததற்கு ஒரு சில ஐடியாக்களை கமல் கொடுத்திருந்திருக்கிறார். அதன்படியே மொத்த படக்குழுவும் செய்ததால் தான் மிகப்பெரிய ஹிட் மூவியாக வெற்றி பெற்றது. இப்படி கமல் சினிமாவில் 40 வருடமாக கற்றுக் கொண்ட ராஜதந்திரங்கள் அனைத்தையும் தற்போது பயன்படுத்தி வசூல் அளவில் வெற்றி பெற்று வருகிறார். இதற்கு இயக்குனர்களையும் பகடைகாயாக யூஸ் பண்ணிக்கொண்டு வருகிறார்.

Also read: ஆண்டவருக்கே அல்வா கொடுக்க நினைத்த சிம்பு.. விட்டு பிடிக்கும் உலக நாயகன்

Trending News