சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

6 அடி நடிகரை பார்த்து பிரமித்த கமல்.. சொன்னதுக்காக ரெண்டு கதாபாத்திரத்தை கொடுத்த உலகநாயகன்

Kamal was amazed to see the 6 feet actor: ஒருவருக்கு வாய்ப்பு தேடி வரும் பொழுது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தொடர்ந்து அவர்களால் நிலைத்து நிற்க முடியும். ஆனால் அதே சமயத்தில் ஏதோ ஒரு காரணங்களாலும் தேடி வந்த வாய்ப்பை நழுவ விடவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி கமல் நடிக்க வேண்டிய ஒரு படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போன படமும் இருக்கிறது.

ஆனால் அந்தப் படத்தை வேறு ஒருவர் நடித்து அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்டார். அது மட்டும் இல்லாமல் கமலும் இந்த படத்தை பார்த்து நான் நடித்திருந்தால் கண்டிப்பாக இந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருக்காது. அவர் நடிக்கப் போய் தான் இந்த கதாபாத்திரம் உயிரோட்டம் வகையில் அமைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதாவது பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த படம் தான் சீவலப்பேரி பாண்டி. இப்படத்தில் நெப்போலியன், பாண்டியன் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு தனித்துவமான நடிப்பை கொடுத்திருப்பார். கமல் மட்டுமில்லை யாராக இருந்தாலும் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை இந்த படத்தில் நெப்போலியன் நடிக்கப் போய் தான் 100% ஹிட்டாகி இருக்கிறது என்றுதான்.

Also read: கமல் போல் வாக்குறுதி கொடுக்கும் விஜய்.. ரெண்டு வருஷத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கப் போகும் தளபதி

அந்த அளவிற்கு இப்படத்தில் நெப்போலியன் வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். அதுவும் அவர் மீசையை முறுக்கிக்கிட்டு சீவலப்பேரி பாண்டியனாக கெத்தாக வருவதாக இருக்கட்டும், ஒவ்வொரு பாடல்வரிகளும் இவருக்கே பொருந்தக் கூடியதாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட இப்படத்தை பார்த்த பிறகு கமல், 6 அடி மனிதராக இருக்கும் நெப்போலியனை கூப்பிட்டு மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார்.

உடனே நெப்போலியன் இதுதான் கிடைத்த சான்ஸ் என்று, சார் என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அடுத்து தொடர்ந்து ஏதாவது இதே மாதிரி ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என கூறியிருக்கிறார். கமலும் சிரித்துக்கொண்டே தலையாட்டிட்டு போயிருக்கிறார்.

அதன் பின்பு கமல் நடிக்கும் போது நெப்போலியன் சொன்னதை ஞாபகம் வைத்து அவருக்கு கொடுத்த கதாபாத்திரம் தான் விருமாண்டி மற்றும் தசாவதாரம். ஆனால் தேவர் மகன் படத்தில் கிட்டத்தட்ட கமலின் நடிப்பும் இதே மாதிரி தான் இருக்கும். அந்த வகையில் ஒருவேளை சீவலப்பேரி பாண்டி படத்தில் கமல் நடித்திருந்தாலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also read: தோளில் கை போட்ட பாவத்துக்கு வச்சு செய்த கமல்.. கடைசியில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்ட உலகநாயகன்

Trending News