புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இந்தியன் 2வில் ஷங்கருக்கு கட்டளையிட்ட உலகநாயகன்.. உயிரே போனாலும் அவர் காட்சிகளை நீக்க கூடாது

ஷங்கர், கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்த இந்தியன் 2 படம் உதயநிதி தலையிட்டால் இப்போது சமூகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த வருடத்திற்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு முதலில் ஆரம்பித்த சமயத்தில் நடித்த பிரபலங்கள் பலர் இப்போது இல்லை. அதுமட்டுமின்றி காஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கருவுற்று இருந்தார். இதனால் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில் இப்போது அவருக்கு குழந்தை பிறந்தே பல மாதங்கள் ஆகிவிட்டது.

Also Read : ரஜினி, கமல் தலையெழுத்தை மாற்றிய அந்த 2 படங்கள்.. சம்பளத்தை தாண்டி லாபம் பார்த்த ரகசியம்

இப்படி இருக்கையில் இந்தியன் 2 படத்தில் ஆரம்பத்தில் விவேக் நடித்திருந்தார். சினிமாவில் பல வருடங்களாக விவேக் பயணித்திருந்தாலும் கமலுடைய படத்தில் நடித்ததில்லை. பார்த்தால் பரவசம் படத்தில் விவேக் நடித்திருந்தாலும் அந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் தான் கமல் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமல் மற்றும் விவேக் இணையும் வாய்ப்பு வந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு விவேக் பிரிந்து சென்றார். அதுமட்டுமின்றி கமலுடன் நடிக்க வேண்டும் என்ற விவேகின் ஆசை நிராசையாக போய்விட்டது. ஏனென்றால் இந்தியன் 2 படப்பிடிப்பில் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறாராம்.

Also Read : இந்தியன் 2 வில் களமிறங்கும் பிரபல நடிகர்.. 6,7 வில்லன்களை பதம் பார்க்க போகும் கமல்

விவேக் இந்த படத்தில் நடித்து விட்டாவது உயிரை விட்டிருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் புலம்பி தீர்த்த வருகிறார்கள். இப்போது உலக நாயகன் திடீரென இயக்குனர் ஷங்கருக்கு கட்டளை போட்டுள்ளாராம். விவேக் உயிர் போனாலும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் நடித்த காட்சிகள் படத்தில் இருக்க வேண்டும் என்று கமல் கூறி உள்ளாராம்.

இதற்கு ஷங்கரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அப்படியே செய்வதாக உறுதியளித்து உள்ளார். ஆனால் விவேக் பாதி காட்சியில் தான் நடித்ததால் அதை எப்படி முழுமையாக கொண்டு சேர்ப்பது என்ற குழப்பத்தில் ஷங்கர் உள்ளாராம். இதனால் படத்தில் சில மாற்றங்கள் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read : கமல், சூர்யா லியோ படத்தில் நடிப்பார்களா?. விஜய் போட்ட கண்டிஷனால் குழம்பி போன லோகேஷ்

Trending News