ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குள்ளமா இருக்காருன்னு கேவலப்படுத்திய பாலிவுட்.. ஒரே படத்தால் செஞ்சு விட்ட கமல்

Kamal: ஒரு காலத்தில் கமல் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். அதில் பாலிவுட் பக்கத்திலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவர் ஹிந்தி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கு முக்கிய காரணம் அங்கு இருந்த டாப் ஹீரோக்களின் ஆதிக்கம் தான். அதிலும் ஹிந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருந்த அமிதாப்பச்சன் ஆண்டவருக்கு சில தொந்தரவு கொடுத்ததாக செய்திகள் உண்டு.

எப்போதுமே போட்டி நடிகர்களுக்குள் இது போன்ற விஷயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் வேறு மொழியில் இருந்து இங்கு நடிக்க வந்து முன்னணி இடத்தை நோக்கி முன்னேறுவது சிறு பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அவருடைய வளர்ச்சியை தடுக்க பலர் முயற்சி செய்திருக்கின்றனர்.

கமலுக்கு தொந்தரவு கொடுத்த அமிதாப்

அதிலும் அமிதாப்பச்சன் உயரத்தை வைத்து டாமினேட் செய்திருக்கிறார். இவருடைய படங்கள் வந்தால் நம்முடைய மார்க்கெட் காலியாகிவிடும் என ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்ததாக அப்போதைய பத்திரிகைகள் செய்தியை வெளியிட்டது. ஆனால் அங்கு தான் ஆண்டவர் தன்னை நிரூபித்து இருக்கிறார்.

அதாவது எந்த உயரத்தை வைத்து தன்னை மட்டம் தட்டினார்களோ அதே உயரத்தை வைத்து ஹிட் கொடுத்திருக்கிறார். அவருடைய அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அப்பு கேரக்டரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

அப்படத்தின் வெற்றிக்கு அதுவே முக்கிய காரணம் அப்படம் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் சக்கை போடு போட்டது இதன் மூலம் ஆண்டவர் தன்னை கேவலப்படுத்தியவர்களுக்கு சிறப்பான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

கேவலப்படுத்தியவர்களை நோஸ்கட் செய்த கமல்

Trending News