வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எல்லாரையும் தலையை சொறிய வைக்கும் H. வினோத்.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கமல்

Actor Kamal and Director H.Vinoth: கமல், விக்ரம் படத்தில் நடித்த பிறகு காலில் சக்கரம் கட்டிக் கொண்டது போல் எப்பொழுதும் பரபரப்பாகவே சுற்றி வருகிறார். அத்துடன் இப்படத்தின் மூலம் இவருடைய ரேஞ்சே வேற லெவல்ல மாறிவிட்டது. ரொம்ப வருடமாக இழுவையில் இழுத்தடித்துக் கொண்டிருந்த இந்தியன் 2 படம் தற்போது இனிதாக முடிந்து விட்டது.

அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் கமல் படம் பண்ணப் போகிறார். அதற்காக 35 நாட்கள் கால் சீட் கொடுத்து இருக்கிறார். மேலும் இதை உறுதி செய்த நிலையில் வினோத்துக்கு விலை மிகுந்த கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது. இதனைத் தொடர்ந்து கமல் நடிப்பில் மறுபடியும் ஒரு தரமான படத்தை பார்க்கலாம் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

Also read: 3வது இடத்திற்கு போட்டி போட்ட கார்த்திக்.. கமல், ரஜினியை முந்த செய்த வேலை

ஆனால் தற்போதைய நிலவரப்படி கமல், எச் வினோத்துடன் படம் நடிப்பதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக தெலுங்கு படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க சென்று விட்டார். ஒருவேளை இந்தப் படத்திற்கு அதிகமான லாபம் என்பதால் போய்விட்டாரோ என்னவோ . இந்த ப்ராஜெக்ட்டை முடித்துவிட்டு பிக் பாஸ் செல்ல இருக்கிறார்.

அதனால் எச் வினோத் இனியும் கமலை மட்டுமே நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்து விட்டார். அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறார். பின்பு யோகி பாபுவை வைத்தும் ஒரு படம் எடுக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபடுகிறது. ஆக மொத்தத்தில் எச் வினோத் கமல் கூட்டணி ப்ராஜெக்ட் கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: கமல் கொடுத்த டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய நடிகை.. ஒரே போடாக போட்ட பயில்வான்

இதனால் இவர்கள் கூட்டணியில் படம் வெளிவரும் என்று ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அத்துடன் கமலின் முழு கவனமும் பிக் பாஸில் தான் இருக்கிறது. ஏனென்றால் இவர் இல்லாமல் அங்க எதுவும் நடக்காது. அத்துடன் இவருடைய சம்பளமும் படங்களில் நடிப்பதை விட அதிகமாக இருக்கிறது.

கமல் மனசுக்குள் என்ன பிளான் போட்டு வைத்திருக்கிறார் என்று யாருக்குமே தெரியலை. எதையுமே வெளியில் சொல்லாமல் முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைத்து வருகிறார். மேலும் தற்போது கமல் படங்களில் நடிப்பதை விட, இளம் ஹீரோக்களை வைத்து தயாரிப்பதிலும் மற்றும் அக்கட தேசத்தின் ரசிகர்களை கவரும் படியாக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

Also read: இந்தியன்-2 படம் பார்த்த பின் ஷங்கருக்கு பல லட்சம் பரிசு கொடுத்த கமல்.. இவ்ளோ காஸ்ட்லி வாட்சா.?

Trending News