வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாவமன்னிப்பு கொடுக்க தயாராகும் ஆண்டவர்.. நியாயத்தை கட்டி காக்கும் கமலின் அலப்பறை

Biggboss 7-Kamal: பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் அடிதடிக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாராவாரம் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து ஓட்டும் போட்டியாளர்கள் இந்த வாரம் ரொம்பவே உக்ரமாக இருந்தார்கள். அதிலும் நிக்சன், அர்ச்சனாவின் வாக்குவாதம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஒரு நேஷனல் தொலைக்காட்சியில் பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் போட்டியாளர் இன்னும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறாமல் இருக்கிறார். இதற்கு தான் இப்போது பலரும் எதிர்ப்புக் குரல்கள் கொடுத்து வருகின்றனர். அதேபோன்று இந்த வாரமாவது ஆண்டவர் நியாயத்தை தட்டிக் கேட்பாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஆனால் இதற்கு முன்பு அவர் எப்படி அனைவரின் பாவங்களையும் மன்னித்து அருள் புரிந்தாரோ அதை தான் இந்த சனிக்கிழமையும் செய்யப் போகிறார். அதன்படி வாரம் முழுவதும் அட்டூழியம் செய்த நிக்சன் இன்று கமலிடம் சாரி சொல்லி மன்னிப்பு வாங்கி விடுவார்.

Also read: உலக நாயகன் தயாரித்து முக்காடு போட்ட 5 படங்கள்.. முழு சொத்தை முழுங்கிய விஸ்வரூபம்

அதைத்தொடர்ந்து ஆண்டவர், குழந்தைகள் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். மரியாதையை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். எங்க தப்பு நடந்தாலும் நான் தட்டி கேட்பேன். இந்த வீடா இருந்தாலும் சரி என் நாடா இருந்தாலும் சரி என்று அரசியல் கலந்த பஞ்ச் வசனங்களை பேசிவிட்டு சென்று விடுவார்.

இதைத்தான் வாராவாரம் நாம் பார்த்து வருகிறோம். ப்ரோமோவை பார்த்து ஆண்டவர் இன்னைக்கு ஏதோ சம்பவம் செய்யப் போகிறார் என்று நாம் எதிர்பார்ப்போம். ஆனால் அதற்கு எதிர் மாறாக நிகழ்ச்சி காத்து போன பலூன் போல புஸ் என்று ஆகிவிடும்.

பிக்பாஸ் மேடையை தன்னுடைய அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கமல் இந்த வாரமும் அதே சொற்பொழிவை ஆற்றி அலப்பறையை தான் செய்யப் போகிறார். ஆக மொத்தம் சமூகப் பொறுப்பு, நீதி, நியாயம் பற்றி பேசும் ஆண்டவர் சுயலாபத்திற்காக அதை பின்பற்ற மறந்து விடுகிறார்.

Also read: 2 நாள் கதறுவாங்க அப்புறம் மறந்துடுவாங்க.. 100% கார்ப்பரேட் புத்தியை காட்டும் விஜய் டிவி

Trending News