லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததால் அவருடைய டிமாண்ட் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து அடுத்த படமே உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில், பிக்பாஸ் ஷிவானி, காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்திலேயே விஜய் சேதுபதி பவானி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி நடித்து இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை கமல் தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கமல் நடிப்பில் 1986 இல் வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக்கை ரீமிக்ஸ் செய்து இப்படத்திற்கு வெளியிடப்பட்டது. ஆனால் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் இப்படம் இல்லை என்பதை படக்குழு தெளிவுபடுத்தியது. விக்ரம் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மூவருக்கும் தனித்தனியே தீம் மியூசிக்கை உருவாக்கி வருகிறாராம் அனிருத். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக பலமுறை தள்ளிப்போனது. இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவதால் கமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகி முழுவதுமாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. விக்ரம் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இப்படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இன்று பிறந்தநாள் அதனால் படக்குழுவினர் தற்போது ஜூன் 3 ஆம் தேதி விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகப் போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் அண்ணன், தம்பிகளாக அரசியல்வாதியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அனிருத் இசையில் உருவாக்கப்பட்ட மேக்கிங் க்ளிம்ப்ஸ் உடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மூன்று முன்னணி நடிகர்களும் நடித்துள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்தவுடன் அவர்களது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.