சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

வெளியானது விக்ரம் படத்தின் கதை.. வேற லெவல் கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதோடு பகத் பாஸில் துப்பாக்கியை எடுத்து சூட் செய்வது போல வீடியோ வெளியிட்டு, படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

இந்த நேரத்தில் இந்த விக்ரம் திரைப்படம் என்ன மாதிரியான திரைப்படமாக இருக்கும் இதில் கமல்ஹாசன் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு ஆர்வம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. அது குறித்தான ஒரு சிறிய தகவல் தற்போது கசிந்திருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் ஒரு விழிச்சவால் உள்ளவராக இந்த படத்தில் நடிக்கிறாராம். இதற்கு முன்னர் வெளிவந்த விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளில் கூட கமல்ஹாசன் மாஸாக தோன்றினார். அதில் நம்மால் கமல் விழிச்சவால் உடைய மனிதரா என்று கண்டுபிடிக்க ஒரு இடத்தில் கூட அப்படி தெரியவில்லை.

கமல் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அதில் பெயர் பெறக்கூடியவர். அப்படி ஒரு கதாபாத்திரமாக தான் இந்த விழிச்சவால் கதாபாத்திரம் அமைந்து இருக்கிறது. அதன் பின்பு அரசியல்வாதிகளாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து இருக்கின்றனர். இவர்களிடம் நடிகர் நரேன் மாட்டிக்கொள்கிறார். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான விக்ரம் எப்படி அவரை மீட்கிறார் என்பதே படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.

மிரட்டக்கூடிய அரசியல்வாதிகளாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இந்த படத்தில் நடித்திருக்கிறார்களாம். அவர்களின் வில்லத்தனமான அரசியல் விளையாட்டுகளை காட்டும் போது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அதுவும் விழிச்சவால் உள்ள ஒரு மனிதராக கமல்ஹாசன் எப்படி எதிர்த்து போராடுகிறார் என்பதுதான் படத்தின் கரு. அவர்களுக்கு இடையே நடக்கக்கூடிய போராட்டம்தான் இந்த விக்ரம் திரைப்படம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ்க்கு கிடைத்த மிக முக்கியமான வாய்ப்புகளில் விக்ரம் திரைப்படமும் ஒன்று. காரணம் இவ்வளவு சீக்கிரத்தில் உலக நாயகனை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை . அப்படி இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்து இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அதை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இப்போது வெளியாகியுள்ள இந்த தகவலில் குறிப்பிட்ட கதை ஏற்கனவே நாம் பல படங்களில் பார்த்த கதை போலவும் தோன்றுகிறது . படம் வெளியாவதற்கு முன்பு இது என்னுடைய கதை என்று எவரேனும் வழக்கு தொடரவும் வாய்ப்பு இருக்கிறது.

Trending News