புதன்கிழமை, ஜனவரி 8, 2025

டப்பிங் படங்கள் மூலம் அதிகமாக கல்லா கட்டிய கமலின் 3 படங்கள்.. உலக நாயகனுக்கு மட்டுமே சாத்தியம்

Kamalhassan: சினிமாவில் கற்றுத் தெரிந்த ஞானி என்றும் என்சைக்ளோபீடியா என்று சொல்லும் வகையில் கமலின் அற்புதமான படைப்புகளை நம்மால் பார்த்து உணர முடிகிறது. அதனால் தான் ஹீரோவாக கிட்டத்தட்ட 230 படங்களுக்கும் மேல் நடித்து, தற்போது சரித்திரம் படைக்கும் அளவிற்கு தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகிறார். அப்படிப்பட்ட இவருடைய சாதனைகளில் ஒரு விஷயம் தான் டப்பிங் படங்கள்.

அதாவது டப்பிங் படத்தை பொருத்தவரை அக்கட தேசத்து படங்களை தமிழில் டப் செய்யப்பட்டு அதில் வசூலை ஈட்டிய ஒரே நாயகன் உலக நாயகனை சொல்லலாம். தெலுங்கில் வெளிவந்த படங்களில் 3 படங்களை டப் பண்ணி, நடித்த படங்கள் இப்பொழுது வரை நின்னு பேசப்படுகிறது. இது அனைத்தும் உலக நாயகனுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு சலங்கை ஒலி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமலஹாசன், ஜெயப்பிரதா மற்றும் சரத் பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆனால் இது தெலுங்கில் வெளிவந்த சாகரா சங்கமம் என்கிற படத்தை தமிழில் டப் செய்து 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி படமாக அமைந்தது. இப்படம் இன்றைக்கு வரை பேசும் படமாக நிலைத்து நிற்பதற்கு காரணம் கமலின் அற்புதமான நடிப்பு மட்டுமே.

Also read: ரஜினி, கமல் தான் இத பண்ணுவாங்களா.? பேராசையில் அஜித்தை தூதுவிடப் போகும் விஜய்

அடுத்ததாக 1986 ஆம் ஆண்டு சிப்பிக்குள் முத்து என்கிற திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமலஹாசன், ராதிகா, சரத்பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தெலுங்கில் சுவாதி முத்தியாம் என்று வெளியாகி 450 நாட்கள் வரை ஓடியது. அதனால் இப்படத்தை தமிழில் டப் செய்து கமல் மிகப்பெரும் சாதனை படைக்கும் அளவிற்கு வசூலில் கல்லாகட்டிருக்கிறார். அத்துடன் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என்று நந்தி விருந்தையும் பெற்றிருக்கிறது.

அடுத்து 1990 ஆம் ஆண்டு இந்திரன் சந்திரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் தெலுங்கு திரைப்படமான இந்துது சந்துருடு படத்தின் மொழி மாற்றம். இதில் கமலஹாசன் இரண்டு வேடங்களில் நடித்தார். அத்துடன் விஜயசாந்தி, ஸ்ரீவித்யா,  நாகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படி கமல்ஹாசன் நடித்த இந்த மூன்று டப்பிங் படங்களும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

Also read: கமல் கெஞ்சியும் நடிக்க மறுத்த நடிப்பு அசுரன்.. கடைசிவரை நிறைவேறாமல் போன ஆசை

Trending News