வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

பிரயோஜனப்படாத கமலின் 50 வருட அனுபவம்.. நூறில் ஒன்னு தான் ஹிட், பெரும் நஷ்டம் – JK ரித்திஷ்

Kamal: கமல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும், ஹீரோவாக கிட்டத்தட்ட 50 வருடங்களாக பயணித்து வருகிறார். அந்த வகையில் சினிமாவைப் பற்றிய அனுபவங்கள் அவருக்கு ஏகபோகமாக இருக்கிறது. அதனால் தான் சினிமாவை கரைத்து குடித்த என்சைக்ளோபீடியா என்று முத்திரையை பெற்றிருக்கிறார்.

அப்படிப்பட்ட இவரை, எதற்கும் பிரயோஜனப்படாத ஒரு நடிகர் என்றும் கமலை வைத்து படம் எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடையாது என்றும் நடிகர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கமல் சினிமாவில் தோற்றுப் போனதாக கூறும் நடிகர்

அவர் வேறு யாருமில்லை நடிகர் மற்றும் அரசியல்வாதியமான மறைந்த ஜேகே ரித்தேஷ். இவர் காணல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் கமலின் அரசியலையும் நடிப்பையும் பற்றி பேசி இருக்கிறார். அதாவது கமல் அரசியலுக்கு வர தகுதி இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நடிகராகவே அவர் ஒன்னும் சாதித்து வெற்றியைப் பெறவில்லை.

அவர் நடித்த முக்கால்வாசி படங்கள் தோற்று தான் போயிருக்கிறது. எப்பவாவது அத்தி பூத்தது போல் நூற்றில் ஒரு படம் தான் ஹிட் ஆகியிருக்கிறது. கமலை நம்பி படம் எடுத்தால் கண்டிப்பாக தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் தான் ஏற்படும். அதனாலே இவரை வைத்து படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் யாரும் முன் வர மாட்டார்கள். இப்படி சினிமாவில் தோற்றுப் போய் இருக்கும் கமல் என்ன தைரியத்தில் அரசியலில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்.

அதுவும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாக நடிப்பை பார்த்த சினிமாவிலேயே அவரால் வெற்றி பெற முடியாமல் பிரயோஜனம் இல்லாமல் தான் இருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது புதுசாக அரசியலுக்கு நுழைந்தால் மட்டும் எல்லாம் கிடைத்து விடுமா என்ன? எந்த ஒரு நடிகரை நம்பி தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதற்கு வரிசை கட்டி நிற்கிறார்களோ, அந்த ஹீரோக்கள் மட்டுமே ஜெயித்ததாக அர்த்தம்.

அப்படி பார்த்தால் கமல் சினிமாவில் தோற்றுப் போன ஒரு ஹீரோதான். அவர் நடிப்பது மட்டுமில்ல, அரசியலுக்கு வருவதும் பிரயோஜனம் இல்ல என்று கூறி இருக்கிறார். அதற்கு பத்திரிகையாளர்கள் கமலின் படங்கள் சாதனை படைக்கும் அளவிற்கு நடித்துக் கொண்டு வருகிறார். இது போதாதா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு சினிமாவை பொருத்தவரை விருது ஒரு பக்கம் இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்தால் மட்டுமே அது ஒரு கமர்சியல் ஹிட் ஆக இருக்கும்.

ஏனென்றால் சினிமா என்றாலே அது கமர்சியல் தான். அதை விட்டுவிட்டு நான் சாதனை படைக்கணும் விருது வாங்கணும் என்று நினைப்பதற்கான மேடை இது இல்லை. அதனால் என்ன பொறுத்த வரை அவர் சினிமாவிற்கும் அரசியலுக்கும் பிரயோஜனமில்லை என்று முன்னாள் நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான மறைந்த ஜேகே ரித்தேஷ் கூறியிருக்கிறார்.

இந்தியன் 2 வை சொதப்பிய கமல்

- Advertisement -spot_img

Trending News