Kamal : கமல் சிறு வயது முதலே சினிமாவில் பயணித்து வருகிறார். அவருடைய அனுபவமும், ஆற்றலும் சினிமாவில் அலைபறியாதது. இந்த சூழலில் இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென அவர் போட்ட அறிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
பொதுவாக சினிமா பிரபலங்களுக்கு ஒரு அடையாளப் பெயர் வைத்து குறிப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் கமலஹாசனை மக்கள் உலக நாயகன், ஆண்டவர் என பல பெயர்களில் அழைத்து வருகிறார்கள். ஆனால் இப்போது தன்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் அஜித்தை எல்லோரும் தல என்று அழைத்து வந்தனர். ஆனால் அஜித் தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என்று கலைத்து விட்டு தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் அஜித் குமார், அஜித், ஏகே என்று அழைத்தால் போதும் என்று கூறியிருந்தார்.
கமல் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்
அதேபோல் கமலும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சினிமா கலை என்பது ஒரு தனி மனிதன் காட்டிலும் மிகப்பெரியது. எப்போதுமே கலைகளை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு மாணவனாக தான் நான் இருந்து வருகிறேன்.
மேலும் கலையை விட கலைஞன் எப்பவும் பெரியவன் கிடையாது. கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு என்ற பழமொழிக்கேற்ப இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆகையால் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவு எடுத்துள்ளதாக கமல் குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது தன் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள் இனிவரும் நாட்களில் தன்னை கமல்ஹாசன், கமல் அல்லது KH என்று அழைத்தால் போதும். உலகநாயகன் என்று யாரும் குறிப்பிட வேண்டாம் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.