ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடுத்த 5 படங்களை வைத்து கமல் போட்டிருக்கும் வசூல் டார்கெட்.. பிரம்மாண்ட கூட்டணியின் மொத்த லிஸ்ட்

Actor Kamal: சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பிரபலங்களுக்கு பதிலடி கொடுக்க தன் அடுத்த கட்ட பிரம்மாண்ட படைப்புகளைக் கொண்டு போட்டிக்கு தயாராகி வருகிறார் உலக நாயகன் கமலஹாசன். இம்முறை என் டார்கெட் இதுதான் என சவாலோடு களமிறங்கும் சம்பவம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது கமல் தான் அடுத்த கட்ட ப்ராஜெக்ட்களை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு கல்கி 2898AD நக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாபச்சன், தீக்ஷா பதாணி, கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்கள்.

Also Read: தளபதி-68 பூஜையே போடல ஆன பல கோடிக்கு வியாபாரமான ஆடியோ ரைட்ஸ்.. அனிருத் சம்பவத்தால் உருட்ட போகும் யுவன்

மேலும் இப்படத்தில் சனம் இசையமைப்பை மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாகும் இந்தியன் 2 படத்தில் அனிருத் இசையமைப்பை மேற்கொண்டுள்ளார். இவ்விரு படங்களையும் கமல் 2024ல் ரிலீஸ் செய்ய தேதியை லாக் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தான் கேஹெச்233. இப்படத்தின் இசையமைப்பை ஏ ஆர் ரகுமான் மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 35 வருடத்திற்குப் பிறகு மீண்டும் இணைய இருக்கும் இத்தகைய கூட்டணியில் உருவாகும் படம் தான் கே ஹெச்234.

Also Read: 2 நாளில் சாதனை படைத்த ஜெயிலர்.. மிரள வைத்த வசூல், மூன்றாவது நாளில் நடக்கப் போகும் சம்பவம்

மாபெரும் வெற்றியை எதிர்பார்த்து இதற்கான தயாரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்படத்தில் இடம்பெறும் பாடலின் சிறப்பை கூட்ட ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக உள்ளது. பல பிரமாண்டங்களை உள்ளடக்கிய இப்படம் 2025ல் வெளியாகும் எனவும் தகவல் கசிந்து உள்ளது.

படப்பிடிப்பு முடிந்து இந்தியன் 2 ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மீண்டும் ட்ரீட் கொடுக்கும் வகையில் இப்படத்தில் பாகம் 3 2025ல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைப்பை மேற்கொள்ளப் போவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது. இது போன்ற அடுத்த அடுத்த முயற்சிகளை மேற்கொண்டு 2024ல் சுமார் 2000 கோடி வசூல் டார்கெட்டை அடைய விஸ்வரூப முயற்சிகளை போட்டு வருகிறார் உலக நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரஜினிக்காக ஓடிவந்த சிவராஜ்குமார், மோகன்லால்.. ஜஸ்ட் மிஸ் ஆன பாலய்யா

Trending News