வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியன்-2 ரிலீஸ்க்கு கமல் போட்ட கண்டிஷனில் விழி பிதுங்கிய லைக்கா.. இது செஞ்சாதான் படமே வெளிவருமாம்

Actor Kamalhassan: இயக்குனர் சங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இப்படம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பல பிரச்சினைகள் மற்றும் தடைகளை தாண்டி தற்போது வெற்றிகரமாக ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து, அனிருத் இசையமைத்திருக்கிறார். அந்த வகையில் இப்படம் எப்பொழுது திரையரங்குகளில் வரும் என்று பார்ப்பதற்கு ஆவலாக ஒட்டுமொத்த இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் கமல் திடீரென்று இந்த வாய்ப்பைப் இவருக்கு சாதகமாக பயன்படுத்தி இவருடைய சம்பளத்தை அதிகமாக கேட்டிருக்கிறார்.

Also read: உலக நாயகனை விட ஒரு படி கீழ் தான் சூப்பர் ஸ்டார்.. கமல் செய்ததை இன்று வரை செய்ய தவறிய ரஜினி

அதாவது இப்படம் ஆரம்பிக்கப்பட்டது 2019. அப்பொழுது கமலுக்கு பெருசாக சொல்லும் படி மார்க்கெட் இல்லாததால் அவருடைய சம்பளம் 30 கோடிக்கு மட்டுமே பேசப்பட்டது. ஆனால் தற்போது இவருடைய ரேஞ்சே பல மடங்காக உயர்ந்து விட்டது. அந்த வகையில் கடந்த வருடம் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பார்த்து விட்டது.

இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியன் 2 படத்திற்கான இவருடைய சம்பளத்தை 150 கோடி கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்திருக்கிறார். அதுவும் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே இவருடைய சம்பளத்தை கொடுத்தாக வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டிருக்கிறார். இப்பொழுது கேட்டால் தான் நமக்கு கிடைக்கும் என்று தந்திரமாக கேட்டிருக்கிறார்.

Also read: பீஸ்ட், அண்ணாத்த படங்களை அசால்ட்டாக உதறி தள்ளிய ஜெயிலர் பிரபலம்.. கமல் படத்தை தேர்ந்தெடுத்து பண்ண மாஸ் வேலை

அத்துடன் இவர் கேட்டபடி சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே இந்தியன் 2 படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியிட முடியும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. மேலும் இவர் கேட்ட தொகையால் அதிர்ச்சியில் லைக்கா நிறுவனம் விழி பிதுங்கி இருக்கிறது. இவர் கேட்டபடி கொடுக்கவில்லை என்றால் படம் வெளிவருவது கஷ்டம் தான் போல.

ஆனாலும் கமல் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது இவர் கேட்டது என்னமோ சரியாகத்தான் இருக்கிறது. எதுவும் யோசிக்காமல் கமல் திடீரென்று இந்த மாதிரி கண்டிஷன் போடக்கூடிய ஆள் கிடையாது. அதற்கு காரணம் எப்படியும் இந்தியன் 2 படம் வெளி வந்தால் கண்டிப்பாக 1000 கோடி வசூல் செய்யும். அதனால் தான் கமல் எந்தவித தயக்கமும் இல்லாமல் சம்பளத்திற்கு கண்டிஷன் போட்டிருக்கிறார்.

Also read: விக்ரம், ஜெயிலர் கொடுத்த தைரியம்.. மாஸ்டர் பிளான் போட்டு 2000 கோடியை தட்டி தூக்க போகும் ரஜினி, கமல்

Trending News