புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமலுக்கு பிடித்த ஒரு பெயர் எல்லா ஹீரோயினுக்கும் அதான்.. அப்படி என்ன அந்த பேர்ல இருக்குன்னு தெரியலையே.!

கமல் நடிக்க வந்த காலகட்டத்தில் இருந்து அவர் ஏதேனும் ஒரு கருத்தை தன் படங்களில் வைத்துவிடுவார். முக்கியமாக அவர் இயக்கம் படங்களில் வருங்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்கள், வருங்காலத்தில் வரும் ஆபத்துக்கள் அனைத்துமே முன்கூட்டியே சொல்லிவிடுவார்.

இவரது படங்களில் ஹேராம், தசாவதாரம், அன்பே சிவம், விஸ்வரூபம் இன்னும் பல படங்களில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்களை நடக்கப் போவதை பல வருடங்களுக்கு முன்பே சொல்லி தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விடுவார். இது இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு நல்ல பெயர்களையும் வாங்கி கொடுத்துள்ளது.

Also Read : விக்ரம் வெற்றியால் 750 கோடி முதலீடு.. அடுத்தடுத்து கமல் தயாரிப்பில் நடிக்கும் 5 ஹீரோக்கள்

அதேபோல் தனது படங்களில் தன் நண்பர்களுக்காகவும் சில விஷயங்களை செய்துள்ளார் முக்கியமாக இவர் இயக்கிய படங்களாக இருந்தாலும் சரி நடிக்கும் படங்களாக இருந்தாலும் சரி கிரேசி மோகன் தான் பயன்படுத்திக் கொள்வார். முக்கியமாக கமல் நடித்த ஐந்து படங்களில் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு ஒரே பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜானகி என்ற பெயர் இவரது படங்களில் அதாவது பம்மல் கே சம்பந்தம் சிம்ரன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் இல் சினேகா, காதலா காதலா ரம்பா, அவ்வை சண்முகி மீனா, தெனாலி ஜோதிகா இதில் ஹீரோயின்கள் அனைவருக்குமே ஜானகி என்ற பெயரை வைத்திருப்பார். ஒருவேளை கமலின் நெருங்கிய உறவாக இந்த பெயர் இருக்குமா என யோசித்து வந்தனர்.

Also Read : பெரிய இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த 5 தரமான ப்ளாக்பஸ்டர்ஸ்.. ஒரே முறையோடு நிறுத்திக் கொண்ட உலகநாயகன்

இது கிரேசி மோகன் நட்புக்காக செய்யப்பட்ட ஒரு வேலை கிரேசி மோகன் கமலுடன் படத்தில் வேலை செய்யும் பொழுது எந்த கதாபாத்திரத்திற்கு வசனம் எழுதினாலும் சம்பளம் வாங்குவதற்கு முன்பே ஜானகி என்ற பெயரை வைக்குமாறு கேட்டு விடுவாராம். அதற்கு பல இயக்குனர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஆனால் கமல் ஒப்புக்கொண்டு விடுவாராம்.

எதற்காக என்றால் கிரேசி மோகனின் ஆசிரியர் பெயர் ஜானகி அவரால்தான் நல்ல நிலைமைக்கு வந்தோம் என்று வாழ்வில் வெற்றி பெற்ற பிறகும் சினிமாவில் அவரது பெயரை கிரேசி மோகன் பயன்படுத்தியுள்ளார். அதற்கு கமல் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அவர் நடிக்கும் படங்களில் பயன்படுத்தி வந்துள்ளார். நட்புக்காக இத்தனை படங்களில் இந்த பெயரை பயன்படுத்துவது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Also Read : அட்லிக்கு குரு உச்சத்துல இருக்காரு.. 4 வருஷம் பட்ட கஷ்டம், மிரள வைக்கும் ஜவான் மொத்த கலெக்சன்

Trending News