வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

22 வருடத்திற்கு பின் டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு கமல் படம் ரிலீஸ்.. புல்லரிக்க வைக்கும் ட்ரைலர்

Actor Kamal’s Film Re-Released: பல வருடங்களுக்கு முன்பு ரிலீசான டாப் ஹீரோக்களின் படங்களை சமீப காலமாக ரீ ரிலீஸ் செய்வதை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். அப்படிதான் ரஜினியின் பாபா மற்றும் கமலின் வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்போது கமல் இரட்டை வேடத்தில் மிரட்டிய இன்னொரு படத்தையும் இந்த மாதத்தில் ரீ ரிலீஸ் செய்கின்றனர். அதற்கு முன்பு இப்போது அந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்டு பார்ப்போரை புல்லரிக்க வைத்துள்ளனர். உலக நாயகன் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய படம் தான் ஆளவந்தான்.

கடந்த 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை இன்றைய தலைமுறையை கவரும் விதத்தில் டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் எடிட்டிங் செய்து வித்தியாசமான முறையில் ரீ ரிலீஸ் ஆகி போகிறது.

Also read: ரெண்டு இயக்குனர்களை சக்கையாக பிழிந்து எடுக்கும் கமல்.. மணிரத்தினத்துக்கு கொடுக்கும் டார்ச்சர்

ரீ ரிலீஸ் ஆகும் ஆளவந்தான்

22 வருடத்திற்கு முன்பு வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. அதனால் மீண்டும் இந்த படத்தை வரும் 8ம் தேதி ரிலீஸ் செய்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பார்ப்போரை வியக்க வைக்க அளவுக்கு இருக்கிறது .

இதில் இரட்டை வேடத்தில் கமல் போலீசாகவும் வில்லனாகவும் படம் முழுக்க ஆக்ஷனில் மிரட்டி விட்டிருக்கிறார். நிச்சயம் இந்த படம் கோடிக்கணக்கில் வசூலை அள்ளும் என்றும் பட குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

ஆளவந்தான் படத்தின் ட்ரைலர் இதோ!

Also read: ரொமான்ஸில் கமலை மிஞ்சிய 5 ஆர்டிஸ்ட்கள்.. இதயத்தில் காதலை சுமந்த முரளி ராம்கி

Trending News