வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Indian 2: லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் சேனாபதி.. ரிலீஸ் தேதியோடு வெளியான இந்தியன் 2 போஸ்டர்

Indian 2: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இடையில் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக படம் இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

இந்தியன் 2 போஸ்டர்

indian2
indian2

அதன்படி ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப தாமதத்தின் காரணமாக ரிலீஸ் தேதியில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் பற்றி கேள்வி எழுப்பி வந்தனர். ஆனாலும் மீடியாவில் ஜூலை மாதம் நிச்சயம் படம் வெளியாகும் என்ற செய்திகளும் கசிந்தது.

அதன்படி தற்போது பட குழு இந்தியன் தாத்தா எப்போது வருகிறார் என்ற அறிவிப்பை போஸ்டரோடு வெளியிட்டுள்ளது. அது மட்டும் இன்றி வரும் 22 ஆம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் இந்தியன் 2 உலக அளவில் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

லைக்கா தயாரிப்பில் மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் 1000 கோடியை தட்டி தூக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விடாமுயற்சிக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் என நம்பப்படுகிறது.

Trending News