65 வருடங்களாக சினிமாவில் பன்முகத் திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் 68-வது பிறந்தநாளை திரை உலகமே கொண்டாடி மகிழ்கிறது. இவர் 4 வயதில் நடித்த களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களின் சகலகலா வல்லவன் ஆக மாறி இருக்கிறார்.
பொதுவாக கமலஹாசன் சம்பாதித்ததை எல்லாம் சினிமாவிலேயே தான் கொட்டி இருக்கிறார் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் அதைத் தாண்டி அவர் இதுவரை சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு பற்றிய விவரம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது உலக நாயகன் கமலஹாசனுக்கு ஒட்டுமொத்தமாக 50 மில்லியன் டாலர் சொத்து உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் ஆகும். ஆனால் சமீபத்தில் கமல் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சொத்து விபரத்தை தாக்கல் செய்த போது வெறும் 177 கோடி ரூபாய் சொத்துக்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ரஜினி, விஜய், அஜித் போலவே கமலுக்கும் கார் மீது தனி பிரியம் இருக்கும். ஆகையால் இவரிடமும் பிஎம்டபிள்யூ 730 எல்டி மற்றும் லெக்சஸ் எல்எக்ஸ் 507 சொகுசு கார்கள் இருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 3.79 கோடி. அதுமட்டுமின்றி கமலஹாசனுக்கு சென்னையில் வீடு மற்றும் அலுவலகங்கள் பல வருடங்களாக இருக்கிறது. இதன் மதிப்பு 19 கோடி.
Also Read: கமலுக்கு வில்லனாக சத்யராஜ் போட்ட கண்டிஷன்.. துண்ட காணும், துணிய காணும் என ஓடிய இந்தியன் 2 டீம்
மேலும் இவருக்கு சென்னையில் சொந்தமாக இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் நிலங்களின் மதிப்பு 92 கோடி. இதே போல கமலுக்கு லண்டனில் இரண்டரை கோடிக்கு ஒரு வீடு உள்ளது. மேலும் சினிமாவிலும் தயாரிப்பு, நடிப்பு, விளம்பரம், பிக் பாஸ் உள்ளிட்டவற்றில் இருந்து கமல் ஒட்டுமொத்தமாக ஆண்டிற்கு 5 மில்லியன் டாலர் வரை சம்பாதித்து வருகிறார்.
அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 40 கோடி ரூபாய் ஒவ்வொரு வருடமும் சம்பாதிக்கிறார் . ஆனால் இந்த ஆண்டில் அவர் 40 கோடியை தாண்டியும் ஈட்டி இருப்பார். ஏனென்றால் இவர் நடித்து தயாரித்த விக்ரம் திரைப்படம் இவருக்கு சூப்பர் ஹிட் அடித்ததுடன் நல்ல லாபத்தையும் கொடுத்தது.
இவ்வாறு சினிமாவில் பயங்கர பிசியாக இருக்கும் கமலஹாசன் அவர் சம்பாதிப்பதை சினிமாவிலேயே கொட்டினாலும் ஒரு பக்கம் அவர் சொத்துக்களை சேர்த்துக் கொண்டு வருகிறார் என்பது அவருடைய சொத்து விபரத்தை பார்த்ததும் தெரிய வருகிறது.