அதிரடியான காமினேஷனில் கமலின் அடுத்த படம்.. தக் லைஃப் தோல்வியை மறக்க அடிக்க எடுத்த ஆயுதம்

Kamal : கமலுக்கு விக்ரம் படம் இன்ட்ரஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவரது நடிப்பில் வெளியான படங்கள் சரியாக போகவில்லை. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை நம்பி இறங்கிய இந்தியன் 2 படம் தோல்வியை சந்தித்தது.

அதேபோல் எவர்கிரீன் இயக்குனரான மணிரத்னம் கமலை வைத்து தக் லைஃப் படத்தை எடுத்திருந்தார். இந்த படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகவும் அடிவாங்கியது. ஆனாலும் இப்போது புதிய கூட்டணியில் கமல் இறங்க இருக்கிறார்.

ஏற்கனவே அன்பறிவு படத்தில் கமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் ஒரு படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

தக் லைஃப்க்கு பிறகு கமலின் அடுத்த கூட்டணி

சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சித்தார்த்தின் சித்தா மற்றும் விக்ரமின் வீர தீர சூரன் படங்களை இயக்கி இருக்கிறார் சு அருண்குமார். இவருடைய படங்கள் எல்லாமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்போது அவர் ஒரு படத்தின் கதை ரெடி பண்ணிய நிலையில் கமலிடம் கூறியிருக்கிறார். அவரும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் ஜனவரி மாதத்திற்குள் இந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. தக் லைஃப் கொடுத்த தோல்வியை மறக்கடிக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →