வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உலகநாயகன்னு சும்மா ஒன்னும் கூப்பிடல.. யாருமே அறியாத கமலின் 6 சாதனைகள்

1960 ஆம் ஆண்டு ஆரம்பித்த உலக நாயகன் கமலஹாசனின் கலை பயணம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இன்றைய கதாநாயகர்களுக்கு இணையாக போட்டி போட்டு நடித்து வருகிறார். சினிமாவில் கமலஹாசன் தொடாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். வெறும் முயற்சி மட்டும் இல்லாமல் வெற்றியும் கண்டு இருக்கிறார். கமல் தன்னுடைய 60 வருட திரை வாழ்க்கையில் பல சாதனைகள் செய்திருந்தாலும் அதில் முக்கியமான 6 சாதனைகள்.

நான்கு வயதில் கவர்னரிடம் கோல்ட் மெடல்: 1960 ஆம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா ‘ திரைப்படத்திற்காக கமல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதாக கவர்னரிடம் இருந்து கோல்ட் மெடல் வாங்கினார்.

Also Read: கொடூர வில்லனாக கலக்கிய கமல்ஹாசன் படங்கள்

ஆறு மொழியில் நடித்த ஒரே நடிகர்: கமல் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். கமல் நேரடி ஹிந்தி படம் மட்டும் 15 படங்களில் நடித்து இருக்கிறார்.  1981ஆம் ஆண்டு இவர் நடித்த ‘ஏக் துஜே கேலியே’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தன்னுடைய ‘வறுமையின் நிறம் சிவப்பு’ , ‘மூன்றாம் பிறை’ போன்ற பல திரைப்படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்துள்ளார்.

ஏழு முறை இவரின் படங்கள் ஆஸ்கருக்கு சென்றுள்ளது: கமல் ஹாசனின் ஹே ராம், இந்தியன், குருதிப்புனல், தேவர் மகன், நாயகன், ஹிந்தி படமான சாகர், தெலுங்கு படமான ஸ்வாதி முத்யம் என மொத்தம் ஏழு படங்கள் ஆஸ்கர் நாமினேஷன் வரை சென்றுள்ளது.

Also Read: கமல்ஹாசனுடன் இதுவரை இணையாத ஒரே வில்லன் நடிகர்.. மிரட்டியும் கிடைக்காத வாய்ப்பு!

நடன இயக்குனர் கமலஹாசன்: எம்ஜிஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்’ படம், சிவாஜியின் ‘சவாலே சமாளி’, ஜெயலலிதாவின் ‘அன்புத்தங்கை’ ஆகிய படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபர் ஆக செயல்பட்டு இருக்கிறார். மேலும் அவர் நடித்த படமான அவர்கள், சிம்லா ஸ்பெஷல், விருமாண்டி, உத்தம வில்லன் படங்களுக்கும் கோரியோகிராபர் ஆக செயல்பட்டு இருக்கிறார்.

ஸ்கிரிப்ட் ரைட்டர்: 1976 ஆம் ஆண்டு இயக்குனர் சக்தி இயக்கத்தில் கமல் ஹாசன் – ஸ்ரீ வித்யா நடிப்பில் வெளியான உணர்ச்சிகள் திரைப்படத்தில் கமல் உதவி இயக்குனராகவும், ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பணிபுரிந்தார்.

அவார்டுகளின் நாயகன்: 19 முறை பிலிம்பேர் அவார்ட் வென்றுள்ளார் மற்றும் சிறந்த நடிப்புக்கு 3 முறை நேஷனல் அவார்ட் வென்றுள்ளார். 1990 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, 2014 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது, 2016 ஆம் ஆண்டு செவாலியர் விருதும் பெற்றுள்ளார். மேலும் 2011 ஆம் ஆண்டு சிறந்த பரநாட்டியத்திற்கும் விருது வாங்கி இருக்கிறார்.

Also Read: கமல்ஹாசன் வலையில் சிக்கிய 5 இளம் நடிகர்கள்.. வசூல்ராஜா காட்டில் பண மழைதான்

Trending News