வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வனை மிஞ்சிய கெட்டப்பில் கங்கனா ரனாவத்.. சந்திரமுகியாக வாங்கிய சம்பளம்

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்த்ததற்கும் மேலாக வசூல் சாதனை படைத்தது. சோழ சாம்ராஜ்யத்தையும், அரச கால மக்களின் வாழ்க்கை முறையையும் கண்முன்னே தத்ரூபமாக காட்டிய அந்த திரைப்படம் இன்றைய இளம் தலைமுறைகளை வெகுவாக ஈர்த்துவிட்டது.

அது மட்டுமில்லாமல் அந்த படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் உடை, நகை என அனைத்தும் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தற்போது அதையே மிஞ்சும் அளவுக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பி வாசு இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: மணிரத்னத்திற்கு கோடிகள் தான் முக்கியம், தெருக்கோடிகளை பார்க்க மாட்டார்.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்கள்

ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரவணன், வேட்டையன் என்ற இரு வேறு கெட்டப்புகளில் அசத்தியிருப்பார். ஆனால் அதை அடுத்து தொடங்கப்பட்ட இந்த இரண்டாம் பாகத்தில் அவரால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு தான் ராகவா லாரன்ஸ் அந்த கதாபாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த வகையில் இந்த இரண்டாம் பாகம் முந்தைய பாகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வேட்டையன் கதாபாத்திரத்தை வைத்து உருவாகி வருகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு சமமான மற்றொரு கதாபாத்திரம் தான் சந்திரமுகி. அதை முதல் பாகத்தில் போட்டோவாக மட்டும் தான் நாம் பார்த்திருந்தோம். தற்போது அதற்கு உயிர் கொடுப்பது போல் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: சந்திரமுகி 2 படத்தின் ஓடிடி ரைட்சை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. கல்லா கட்ட தயாரான லாரன்ஸ்

சமீபத்தில் இந்த தகவலை லைக்கா புரொடக்சன்ஸ் போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதில் அவர் அரச பெண்கள் போன்ற தோற்றத்தில் அழகோவியமாக இருந்தார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

சந்திரமுகியாக கங்கனா ரனாவத்

kangana-ranaut
kangana-ranaut

அந்த வகையில் அவர் இந்த படத்திற்காக 10 கோடி வரை சம்பளமாக கேட்டிருக்கிறார். அதை தயாரிப்பு நிறுவனமும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கொடுக்க சம்மதித்திருக்கிறது. ஏனென்றால் அவருடைய கதாபாத்திரத்திற்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதாம். அதை உணர்ந்து அவரும் முழு சந்திரமுகியாகவே மாறி நடித்து வருகிறாராம்.

Also read: லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

Trending News