புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பருத்திவீரன் படத்தில் நடிக்க வேண்டியது கார்த்தியே இல்ல.. உண்மையை போட்டு உடைத்த கஞ்சா கருப்பு

Paruthiveeran issue: 17 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் அடித்த பருத்திவீரன் படத்தின் சர்ச்சை இப்போது வெளியாகி தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் அமீருக்கு ஆதரவாக அந்த சமயத்தில் அவருடன் பயணித்த நிறைய பேர் குரல் கொடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில் பாடலாசிரியர் சினேகன் கூட பருத்திவீரன் படத்தால் அமீர் பட்ட கஷ்டங்களை சொல்லி இருந்தார்.

தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் பணியாற்றியவர்கள் நிறைய பேர் அமீருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இந்த படத்தில் டக்லஸ் எனும் கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்தவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் இப்போது அமீருக்கு ஆதரவாக பேசியது மட்டுமில்லாமல், அவருடைய ஆதங்கத்தையும் சொல்லி இருக்கிறார்.

பருத்திவீரன் படத்தில் நடிக்க வேண்டிய ஹீரோ

பருத்திவீரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது கார்த்தி இல்லையாம். நடிகர் சூர்யாவுக்கு தான் அமீர் இந்த கதையை சொல்லி இருக்கிறார். அந்த சமயத்தில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரை ஹீரோவாக்கலாம் என்று முடிவெடுத்த போது தான் சூர்யா அமீரிடம் இந்த கதையில் தன் தம்பியை நடிக்க வைக்க பரிந்துரைத்திருக்கிறார்.

Also Read:போறாத காலத்தில் சிவகுமாரின் குடும்பம்.. இதுவரை சிக்கி தவித்த 5 பிரச்சனைகள்

கார்த்தி இந்த படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு எதுவுமே தெரியாது. இயக்குனர் அமீர் தான் கார்த்தியை ஒரு நல்ல நடிகனாக உருவாக்கியது. பருத்திவீரன் ஷூட்டிங்கின் போது சொல்லுங்க அண்ணா, சரிங்க அண்ணா என்று அமீருக்கு கும்பிடு போட்டுக் கொண்டிருந்தவர் தான் கார்த்தி. கார்த்தி ஒருவரால் மட்டும் இந்த படம் ஹிட்டாகவில்லை. சித்தப்பு, டக்லஸ், பிணந்தின்னி, முத்தழகு, குட்டிசாக்கி என அத்தனை கேரக்டர்களும் இணைந்தது தான் பருத்திவீரன்.

இவர்கள் அத்தனை பேரும் பணியாற்றியது அமீர் ஒருவருக்காக தான். இந்தப் படத்தை தயாரித்தது இயக்குனர் அமீர் மட்டும்தான். அந்த சமயத்தில் அவர் பணத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேருக்கும் தெரியும். அவர் மீது இப்படி ஒரு திருட்டுப் பழியை சுமத்துவது நியாயமே இல்லை என்று கஞ்சா கருப்பு சொல்லி இருக்கிறார்.

கஞ்சா கருப்பு மட்டுமில்லை, படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குட்டிசாக்கு கூட அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் அமீரால் வாழ்க்கை பெற்ற கார்த்தி இன்றுவரை மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது திரையுலகினருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் சிலர் வாய் திறந்தால் நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

Also Read:சூர்யா, கார்த்தியை குட்டிச்சுவராக ஆக்கியதே இவர்தான்.. ஆதங்கத்தில் கண்டபடி திட்டிய சிவக்குமார்

Trending News