Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கன்னத்தை பழுக்க வைத்த கண்ணம்மா.. அம்பலமானது திருட்டு கல்யாணம்

கன்னத்தை பழுக்க வைத்த கண்ணம்மா.. அம்பலமானது திருட்டு கல்யாணம்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவிற்கு வாக்கு கொடுத்ததால் பாரதி அவரை திருமணம் செய்து கொள்வதற்காக கோயிலுக்கு வருகிறார். இருப்பினும் இன்னும் இரண்டு நாள் கழித்து கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பாரதி வெண்பாவிடம் கேட்கிறார். ஆனால் பாரதியை […]

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவிற்கு வாக்கு கொடுத்ததால் பாரதி அவரை திருமணம் செய்து கொள்வதற்காக கோயிலுக்கு வருகிறார். இருப்பினும் இன்னும் இரண்டு நாள் கழித்து கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பாரதி வெண்பாவிடம் கேட்கிறார்.

ஆனால் பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அவர் கையால் தாலி கட்ட பார்க்கிறார். இந்த விசயம் தெரிந்ததும் பதறி அடித்துக் கொண்டு குடும்பமே கோயிலுக்கு வருகிறது. அப்போது தன்னுடைய கணவர் மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள துணிந்ததை பார்த்ததும் தாங்க முடியாத கண்ணம்மா வெண்பாவை ஓங்கி அறைந்து கன்னத்தை பழுக்க வைத்தார்.

பிறகு பாரதியின் கழுத்தில் இருக்கும் மாலையை அற்று எரிந்து, ‘முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்கிறாயா!’ என கோவிலிலேயே அவர்களது திருட்டு கல்யாணத்தை அம்பலப்படுத்துகிறார். உடனே கோயிலில் இருக்கும் அனைவரும் வெண்பாவை படு கேவலமாக பார்ப்பதுடன் சௌந்தர்யாவிடமும் வாங்கி கட்டி கொள்கிறார்.

பிறகு பாரதியிடம் சௌந்தர்யா எதற்காக வெண்பாவை திருமணம் செய்து கொள்கிறாய்? என கேட்டபோது, ‘வெண்பா வயிற்றில் குழந்தை வளர்கிறது’ என்று பாரதி சொன்னதும் உடனே ரோஹித், ‘அது என்னுடைய குழந்தை’ என வெண்பாவின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துகிறார்.

அதன் பிறகு இதே கோவிலில் வெண்பா மற்றும் ரோஹித் இருவருக்கும் அங்கு இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கின்றனர். இனி வெண்பாவின் டார்ச்சல் பாரதிக்கு இருக்கப் போவதில்லை. இதன் பிறகு பாரதிக்கு டி.என்.ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வருகிறது. அப்போது கண்ணம்மாவின் மீது இவ்வளவு நாள் சந்தேகப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்கிறார்.

பின் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு பாரதி கதறுவார். இனிமேல் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து வாழப் போகிறார். எனவே அதிரடி திருப்பங்களுடன் கிளைமாக்ஸ்-இல் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் இன்னும் சில தினங்களில் நிறைவடைய போகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.