Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஒரு திருமணத்துக்கு 25 கோடியில் விளம்பரமா? கண்ணன் ரவி பெயரில் பரவும் பேச்சு!

ஒரு திருமணத்துக்கு 25 கோடியில் விளம்பரமா? கண்ணன் ரவி பெயரில் பரவும் பேச்சு!

ஒரு திருமணத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த முடியுமா என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது தொழிலதிபரும் தயாரிப்பாளருமான கண்ணன் ரவி வீட்டு திருமணம். இந்த திருமணத்திற்காக சுமார் 25 கோடி வரை விளம்பரத்துக்காக செலவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி […]

ஒரு திருமணத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த முடியுமா என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது தொழிலதிபரும் தயாரிப்பாளருமான கண்ணன் ரவி வீட்டு திருமணம். இந்த திருமணத்திற்காக சுமார் 25 கோடி வரை விளம்பரத்துக்காக செலவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதன் காரணமாகவே தற்போது தமிழ்நாடு முழுவதும் கண்ணன் ரவி பெயர் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பணத்தை வாரி இறைத்தால் ஒரே நிகழ்ச்சியை வைத்து எவ்வளவு பெரிய அளவில் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதையும் இந்த திருமணம் காட்டியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்வார்கள். ஆனால் அந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக அதைவிட அதிகமாக விளம்பரத்துக்கும் செலவு செய்வது போல, இந்த திருமணத்தையும் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பலரையும் இந்த திருமணத்தைப் பற்றி பேச வைத்ததாகவும், இதற்காக பெரிய அளவில் பணம் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் திருமணம் நடந்த இடத்தில் வந்த விஐபிகளைவிட, கேமரா மற்றும் மொபைல் போன்களுடன் வந்த சமூக வலைதள பிரபலங்கள்தான் அதிகமாக கண்ணில் பட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதன் மூலம் ஒரே திருமணத்தை வைத்து மொத்த சமூக வலைதளங்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் கண்ணன் ரவி என்ற பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. இதன்மூலம் மிகப்பெரிய வியாபாரம் நடக்க உள்ளதாம்.

பணம் இருந்தால் ஒரு திருமணத்தையே மிகப்பெரிய விளம்பர நிகழ்ச்சியாக மாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு இந்த திருமணம் ஒரு முன்னுதாரணம்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.