வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அரசன் படம் பிரபல ரவுடி மயிலை சிவக்குமாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் கதைக்களம் மற்றும் சிம்புவின் கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
முன்னதாக ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் வில்லன் கிஷோர் கதாபாத்திரத்தை ஒரு மாஸான வில்லனாக செதுக்கியிருந்த வெற்றிமாறன், இந்த ‘அரசன்’ படத்திலும் மயிலை சிவகுமாரின் பிம்பத்தை மிக ஆழமாகவும் யதார்த்தமாகவும் திரையில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தில் பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா மற்றும் யோகலட்சுமி ஆகிய மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இருப்பினும், இந்த மூன்று நடிகைகளில் சிம்புவின் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளனர்.
பிரியங்கா மோகன் தனது வழக்கமான துருதுருப்பான நடிப்பால் சிம்புவுக்கு ஜோடியாக வரக்கூடும் என்று நினைத்தாலும், வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்திற்குப் பிறகு மீண்டும் அவரோடு கைகோர்க்கும் ஆண்ட்ரியாவுக்குத்தான் கதைக்கு வலு சேர்க்கும் முதன்மைப் பாத்திரம் கொடுக்கலாம்.
அதில் யோகலட்சுமியின் கதாபாத்திரமும் கதையின் திருப்புமுனைக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்பதால், வெற்றிமாறன் அமைத்துள்ள இந்த மூவர் கூட்டணியில் சிம்புவின் உண்மையான ஜோடி யார் என்பதில் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதம் கிளம்பியுள்ளது.




