Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

12 பட வாய்ப்புகளை நிராகரித்த இசைப்புயல்.. ராமாயணாவுக்காக இப்படி ஒரு அர்ப்பணிப்பா?

12 பட வாய்ப்புகளை நிராகரித்த இசைப்புயல்.. ராமாயணாவுக்காக இப்படி ஒரு அர்ப்பணிப்பா?

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக ‘ராமாயணா’உருவாகி வருகிறது.நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர்,சாய் பல்லவி,யஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மரும் இப்படத்தின் இசைப் பணியில் இணைந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில்,ராமாயணா படத்திற்காக தான் மேற்கொண்டு வரும் இசைப் பணிகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.இப்படத்தின் இசைக்காக கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும்,இந்தப் படத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பதால்,முன்னணி இயக்குநர்களின் படங்கள் உட்பட சுமார் 10 முதல் 12 திரைப்படங்களின் இசையமைக்கும் வாய்ப்புகளைத் தவிர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அதுமட்டுமின்றி,படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இறுதி செய்வதற்காகவே 12 முதல் 13 முறை வெவ்வேறு இசை வடிவங்களில் மாற்றங்களைச் செய்து பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.தனக்குத் திருப்தி அளிக்கும் வகையிலும் படத்தின் கதைக்கும் காட்சிகளுக்கும் பொருத்தமாகவும் இசை அமைய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தியதாகக் கூறியுள்ளார்.


பொதுவாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தச் சூழலில், ஒரு படத்திற்காக மற்ற திரைப்படங்களின் வாய்ப்புகளைக்கூட ஒதுக்கி வைத்து அவர் உழைத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.