இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த போட்டி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய பிங்க் பால், பகலிரவு டெஸ்ட் போட்டி. இதிலும், இந்தியாவின் கையே ஓங்கி இருக்கிறது. வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர் ஒருவர் கபில் தேவின் 30 வருட சாதனையை முறியடித்துள்ளார். இந்தியாவில் அதிவேக அரை சதம் படித்தோர் பட்டியலில் ஆல்ரவுண்டர் கபில் தேவ் தான் முதலிடத்தில் உள்ளார். அவர் 30 பந்துகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிவேக அரை சதம் அடித்திருந்தார்.
இப்பொழுது ரிஷப் பண்ட் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் மூலம், வெறும் 28 பந்தில் இலங்கைக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரை சதம் அடித்து முதலிடத்தை இடத்தைப் பிடித்துள்ளார்.
சமயத்தில் இந்திய அணியில் ஷர்துல் தாகூர் 31 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக விரேந்திர சேவாக் 4வது இடத்தில் இருக்கிறார்.
முதல் இடத்தை பாகிஸ்தான் அணியை சேர்ந்த மிஸ்பா உல் ஹக் பிடித்துள்ளார். அவர் பெரும் 21 பந்துகளில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.