Karthi : சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது மெய்யழகன் படம். முதல் முறையாக கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி காம்பினேஷனில் உருவான இந்த படத்திற்கு வரவேற்பு அமோகமாக கிடைத்து வருகிறது.
96 போன்ற எதார்த்தமான படத்தை கொடுத்த பிரேம்குமார் மெய்யழகன் படத்தில் அதனை காண்பித்திருக்கிறார். 35 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் முதல் நாளே கிட்டத்தட்ட மூன்று கோடியை தாண்டி வசூலை அள்ளி இருக்கிறது. இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.
இந்த சூழலில் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி இருவருக்குமே பொருத்தமான கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். இந்நிலையில் மெய்யழகன் படத்தில் இவர்கள் இருவரும் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது. அரவிந்த்சாமி ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
மெய்யழகன் படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி சம்பளம்
அதைத்தொடர்ந்து அவரது மார்க்கெட் குறைந்த நிலையில் தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இப்போது தனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் அரவிந்த்சாமி மெய்யழகன் படத்திற்கு 5 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார்.
அவரைவிட நான்கு மடங்கு அதிகமாக கார்த்தியின் சம்பளம் இருக்கிறது. தனது அண்ணன் தயாரிப்பில் நடித்திருக்கும் கார்த்தி மெய்யழகன் படத்திற்கு 20 கோடி வரை சம்பளம் பெற்று இருக்கிறாராம். மேலும் அடுத்ததாக கார்த்தி சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இது தவிர லோகேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள கைதி 2 படமும் கார்த்தியின் லைன் அப்பில் இருக்கிறது. இவ்வாறு விட்ட மார்க்கெட்டை மீண்டும் கார்த்தி பிடித்துள்ள நிலையில் தொடர்ந்து அவருக்கு வெற்றி படங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
மெய்யழகனாக ஜெயித்த கார்த்தி