புதன்கிழமை, ஜனவரி 29, 2025

நம்ம கடந்து வந்த காலம் பொற்காலம்.. கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் மெய்யழகன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Meiyazhagan Trailer: பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகி இருக்கும் மெய்யழகன் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது. 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் தற்போது ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இதன் டீசர் கவனம் ஈர்த்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லர் எதார்த்தமாக அதே சமயம் படம் பார்க்கும் ஆவலையும் தூண்டி இருக்கிறது.

ஒரு திருமணத்திற்காக கிராமத்திற்கு வரும் அரவிந்த்சாமி கார்த்தியை சந்திக்கும் நிகழ்வுகளும் அவர்களுக்கு இடையே இருக்கும் உறவும் தான் படத்தின் கதை. சாதாரணமான கிராமத்து கதையம்சமாக இருந்தாலும் ட்ரெய்லர் பார்ப்பதற்கு மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.

மெய் மறக்க வைக்கும் மெய்யழகன் ட்ரெய்லர்

அதிலும் அரவிந்த் சாமியை அத்தான் என அழைத்து உருகும் கார்த்தி இயல்பான வெகுளித்தனத்தால் கவர்கிறார். அதேபோல் அவருடைய பாசத்திற்கு கட்டுப்பட்டு மெய்மறந்து நிற்கும் அரவிந்த்சாமியின் கதாபாத்திரமும் நமக்கு ரொம்பவும் புதுசு.

இருவரும் கலகலப்பாக பேசிக் கொள்வது, தண்ணி அடிப்பது, மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் என ட்ரெய்லர் ரகளையாக இருக்கிறது. அதேபோல் உலக நாயகனின் குரலில் யாரோ இவன் யாரோ என பின்னணியில் ஒலிக்கும் பாடலும் தவிப்பை ஏற்படுத்திகிறது.

மேலும் நம்ம கடந்து வந்த காலம் பொற்காலம் என கார்த்தி சொல்லுவதும் ஜல்லிக்கட்டு காளை சீறி பாய்வதும் என ட்ரெய்லர் முடிகிறது. 96 போன்ற அழுத்தமான கதையை கொடுத்த பிரேம் குமாருக்கு மெய்யழகன் நிச்சயம் வெற்றி தான் என ரசிகர்கள் இப்போதே வாழ்த்து கூறி வருகின்றனர்.

கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியின் மெய்யழகன் ஹிட் அடிக்குமா.?

Trending News