வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ராஜ்கிரண் காலில் விழுந்து கதறும் கார்த்தி.. சூட்டிங் ஸ்பாட்டில் வேஷ்டி பாய் செய்யும் அக்கப்போரு

Actor Karthi: நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துவிட்டது. இந்த படத்திற்குப் பிறகு இவருடைய மார்க்கெட் ரேட் சற்று உயர்ந்துவிட்டது. அந்த வகையில் இவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவருடைய 26வது படத்தை நலன் குமாரசாமி இயக்க இருக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க போகிறார்.

Also read: இனி தனியா, கெத்தா நான் தெரியணும்.. பல லட்சம் செலவு செய்து கார்த்திக் எடுக்கும் புது அவதாரம்

அத்துடன் இதில் கார்த்தியின் தாத்தாவாக ராஜ்கிரண் நடிக்க இருக்கிறார். இதில் இவருடைய கதாபாத்திரம் என்னவென்றால் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருப்பது போல் கேரக்டர் அமைந்திருக்கிறது. பொதுவாக இவருடைய நடிப்பு எதார்த்தமாக தான் இருக்கும். அதிலும் இப்படத்தில் எம்ஜிஆர் போல் என்பதால் அவர் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் நுணுக்கமாக பார்த்து தெரிந்திருக்கிறார்.

மேலும் ராஜ்கிரனை வேஷ்டி சட்டையில் தான் எல்லா படத்திலும் பார்த்திருப்போம். ஆனால் இதில் சற்று வித்தியாசமான கெட்டப்புடன் வலம் வருகிறார். அதாவது மஞ்ச கலர் சட்டை, சிவப்பு கலர் பேண்ட், பிரவுன் கலர் ஷூ, வெள்ளை கலர் தொப்பி அணிந்து கொண்டு சூட்டிங் ஸ்பாட்டில் எம்ஜிஆர் போல் சுற்றித் திரிகிறாராம்.

Also read: அக்கட தேசத்து இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் சிக்கிடாதீங்க!

அத்துடன் எம்ஜிஆர் எப்படி பழைய படங்களில் வந்து ரணகளம் செய்வாரோ, அதேபோல் ராஜ்கிரனும் சூட்டிங் ஸ்பாட்டில் அக்கப்போர் செய்து வருகிறாராம். இவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் படப்பிடிப்பில் உள்ளவர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். ஆனால் கார்த்தி மட்டும் ராஜ்கிரண் செய்ததை பார்த்து வயிறு வலிக்கும்படி சிரித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல போதும்பா சாமி ஆள விடுங்க என ராஜ்கிரன் காலில் விழுந்து கதறுகிறாராம். அந்த அளவிற்கு சூட்டிங் ஸ்பாட்டில் ராஜ்கிரண் அக்கப்போர் பண்ணிக் கொண்டிருக்கிறார். மேலும் அங்கு இருப்பவர்களை கலாய்த்து குறும்புத்தனம் செய்து கார்த்தியை ஒரு வழி பண்ணி விடுகிறார். இவருக்குள் இப்படி ஒரு எம்ஜிஆர் இருக்கிறாரா என்று ஆச்சரியத்தில் பட குழுவில் உள்ளவர்கள் பார்த்து வருகிறார்கள்.

Also read: விஷ்ணு விஷாலுக்கு அமைந்த படத்தை தட்டி பறித்த கார்த்தி.. வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?

Trending News