சென்ற வாரம் 6 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆனது, அவற்றில் கார்த்தியின் மெய்யழகன் படமும் ஒன்று. “96” படத்தை இயக்கிய பிரேம்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நன்றாக இருக்கிறது ஆனால் ஏதோ ஒன்று இந்த படத்திற்கு தடையாய் நிற்கிறது என்று சொல்லப்பட்டது.
படத்தின் நீளம் தான் என கண்டுபிடித்த பிரேம் குமார் அதை 18 நிமிடங்கள் குறைத்தார். அதன் பின்னரும் ஏழு நிமிடங்கள் குறைக்கப்பட்டது. கலவையான விமர்சனங்களுடன் இப்பொழுது இந்த படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜய்யின் கோட் படம் பாதி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கடும் வயிற்றெரிச்சலில் கார்த்தி அண்ட் கோ
மெய்யழகன் படத்திற்கு கிட்டத்தட்ட 200 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கி உள்ளனர். படத்தின் விமர்சனம் டல் அடிப்படையொட்டி இரண்டு காட்சிகள் மட்டுமே இந்த படத்திற்கு கொடுத்துள்ளனர். இதனால் கடும் அப்செட்டில் கார்த்தி மற்றும் இயக்குனர் பிரேம்குமார் இருந்து வருகின்றனர்
இதற்கிடையே சதீஷ் ஹீரோவாக நடித்த படம் சட்டம் என் கையில். இந்தப் படத்திற்கு எல்லா பக்கங்களிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வருகிறது அதனால் இந்த படத்திற்கு ஸ்க்ரீன்களை அதிகப்படுத்தி வருகின்றனர். கொஞ்சம் கூட காமெடியே இல்லாத சீரியஸான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார் சதீஷ்.
இந்தப் படத்தின் விமர்சனத்தை பார்த்து செம ஹேப்பியில் இருக்கிறார் சதீஷ். இப்பொழுது கான்ஜுரிங் கண்ணப்பனின் இரண்டாம் பாகம் ரெடியாகி வருகிறது. சதீஷ் ஹீரோ அந்தஸ்துக்கு மாறி விட்டீர்கள் அதனால் மக்கள் இனிமேல் அவரை சீரியஸான இடத்தில் வைப்பார்கள் என்று ஜிம், சிக்ஸ் பேக் என ரெடியாகி கொண்டிருக்கிறார். ஒரே படத்தால் சதீஷுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.