சர்தார் படத்துக்கு பிறகு, ஜப்பான், மெய்யழகன் என அடுத்தடுத்து தொடர்ந்து நடித்தாலும் எந்த படமும் கார்த்திக்கு கை கொடுக்கவில்லை. இப்பொழுது இவரது நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களாகிய வா வாத்தியாரே மற்றும் சர்தார் 2 வெளிவர இருக்கிறது.
சர்தார் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுத்து வருகிறார்கள். இந்தப் படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். பூந்தமல்லியில் பிரம்மாண்ட சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. பகத் பாசில் நடித்த ஆவேசம் படத்தின் பைட் மாஸ்டர் சேத்தன் டிசோசா தான் இதில் வேலை செய்து வருகிறார்.
மெய்யழகன் படத்தில் அரவிந்த் சாமியுடன் கிராமத்து கதையில் ஊறிப் போய் நடித்தும் படம் சரியாக போகவில்லை. இப்பொழுது அரவிந்த் சாமியை விட்டுவிட்டு எஸ் ஜே சூர்யா உடன் கூட்டணி போட்டு வருகிறார் கார்த்தி. அடுத்தடுத்த படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள்.
சர்தார் 2 படத்திற்காக சைனீஸ் லுக்கில் சுற்றித் திரிகிறார் எஸ் ஜே சூர்யா. கிரீன் மேட் செட் போட்டு சைனா பார்டரில் சண்டை காட்சிகள் நடப்பது போல் படமாக்கப்படுகிறது சர்தார் 2. எஸ் ஜே சூர்யா கைவசம் அடுத்தடுத்த ஐந்து பெரிய படங்கள் வைத்து கொண்டு பிஸியாக சுற்றி வருகிறார்.
இந்தியன் 3, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், சர்தார் டு, வீரதீரசூரன், உயர்ந்த மனிதன் என ஏகப்பட்ட ப்ராஜெக்டுகள் கையில் வைத்திருக்கிறார். இது மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்சமயம் அவர் கேரியரின் உச்சத்தில் இருந்து வருகிறார்.