திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கார்த்தி, மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக வேலை செய்த 3 படங்கள்.. அசால்டாக சமாளிக்கும் வந்தயத்தேவன்

பொன்னியின் செல்வன் படத்தில் நம்மைப் போல ஒருவராக பார்க்கப்படுவது வந்தியத்தேவன். இந்தக் கதையோடு முழுவதுமாக செல்லக்கூடியவர் இவர்தான். அந்த கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக கார்த்தியை தேர்ந்தெடுத்துள்ளார் மணிரத்தினம். ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பே கார்த்திக் மணிரத்தினத்துடன் பணியாற்றியுள்ளார்.

அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கார்த்தியின் காற்று வெளியிடை படத்தை மணிரத்னம் தான் இயக்கி இருந்தார். ஆனால் கார்த்தி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக உதவி இயக்குனராக சில படங்களில் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் கார்த்திக்கு இயக்குனராக வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது.

Also Read : வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

அதுவும் மணிரத்தினம் இயக்கிய படங்களில் தான் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதன்பிறகு தான் அவருக்கு நடிகராக வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வருகிறார். கார்த்தி மணிரத்தினத்துடன் உதவி இயக்குனராக வேலை பார்த்த மூன்று படங்களை தற்போது பார்க்கலாம்.

ஆயுத எழுத்து : கடந்த 2004 ஆம் ஆண்டு மாதவன், சித்தார்த், சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் தான் முதல் முறையாக கார்த்தி மணிரத்தினத்தை சந்தித்து இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.

Also Read : ஜெயராமின் தொப்பைக்காக மணிரத்னம் செய்த வேலை.. பெரிய மனுஷன் செய்ற வேலையா இது

யுவா : அஜய் தேவகன், அபிஷேக் பச்சன், விஜய் ஒபராய், கரீனா கபூர், ராணி முகர்ஜி, ஈஷா தியோல் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் யுவா. தமிழில் ஆயுத எழுத்து படத்தின் நேரடி இந்தி பதிப்பாக இப்படம் எடுக்கப்பட்டது. மணிரத்தினம் இயக்கிய இந்த படத்தில் அவருக்கு உதவி இயக்குனராக கார்த்தி பணியாற்றி இருந்தார்.

குரு : மணிரத்தினம் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், மாதவன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குரு. இந்த படம் பாலிவுட்டில் எடுக்கப்பட்ட தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியானது. இப்படத்திலும் கார்த்திக் உதவி இயக்குனராக பணியாற்று இருந்தார்.

இதனால் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி அவருடைய காட்சி எடுத்து முடிந்த பின்பு முன் அனுபவம் காரணமாக உதவி இயக்குனராக பணியாற்றினாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த விஷயத்தை கார்த்தி பகிர்ந்து கொண்டார்.

Also Read : வந்தியதேவனுக்கு டஃப் கொடுத்த கூல் சுரேஷ்.. பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தை போடு

Trending News