திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

12 வருடங்களுக்குப் பிறகு கார்த்தியுடன் இணையும் பிரபலம்.. அடுத்த தேசிய விருதுக்கு தயாராகும் இயக்குனர்

ராஜுமுருகன் ஜோக்கர் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். அதுமட்டுமல்லாமல் ஜோக்கர் படத்திற்கு தேசிய விருதும் பெற்றார். இந்நிலையில் இவர் நடிகர் கார்த்தியின் படத்தை இயக்குகிறார். ராஜு சமூகம் சார்ந்த விஷயங்களில் மிகவும் அக்கறையாக இருப்பார்.

கார்த்தியின் சுல்தான் படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர பிஎஸ் மித்ரன் இயக்கும் சர்தார் படத்திலும், முத்தையா இயக்கும் விருமன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஜுமுருகன் இயக்கும் படத்தில் கார்த்திக்கு வில்லனாக சக்தி வாய்ந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், தற்போது கமலஹாசனுடன் விக்ரம் ஆகிய படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் படத்திலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் சேதுபதி, கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலை 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராஜுமுருகன் படத்தில் இருவரும் இணைய உள்ளார்கள். ஆனால் தற்போது கார்த்திக்கு இணையாக உள்ள கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் அதற்கு காரணம் அவரது சினிமாவின் வளர்ச்சி தான்.

கார்த்திக்கு வாரிசு நடிகர் என்பதால் முதல் வாய்ப்பை ஹீரோவால் கிடைத்து விட்டது. ஆனால் விஜய் சேதுபதி பல வருடங்களுக்குப் பிறகுதான் இந்த இடத்தை அடைந்துள்ளார். கார்த்திக்கு இணையாக விஜய் சேதுபதியின் சினிமா வளர்ச்சியை பார்த்து தற்போது பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

ராஜுமுருகன் படங்கள் சமூக அக்கறை கொண்ட படங்களாக வெளியான நிலையில் கார்த்தியுடன் இணைந்துள்ள இப்படம் கமர்ஷியல் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Trending News